பிரபஞ்சன் நினைவு முதல் நாவல் போட்டி – 2026

பிரபஞ்சன் நினைவு முதல் நாவல் போட்டி – 2026 2019ஆம் ஆண்டு, பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டிக்கு புதிய எழுத்தாளர்களுடன் பல மூத்த படைப்பாளர்களும் தங்கள் படைப்புகளை அனுப்பி, தங்கள் பங்கேற்பின் மூலம் அதற்கு பெருமை சேர்த்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மீண்டும் ஒரு போட்டியை அறிவிக்கிறோம். ஆனால் இம்முறை இந்தப் போட்டி, முழுக்க முழுக்க முதல்முறையாக நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கானதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடனும், Prapanchan Foundation - பிரபஞ்சன் அறக்கட்டளை தலைவர் Pns Pandian, Puduvai Ilavenil ஆகியோருடன் கலந்தாலோசித்தபோது, முதல் முறையாக நாவல் எழுதும் படைப்பாளர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தப் போட்டி இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து அவர்களின் படைப்புகளுக்கு இரு இலக்கிய மதிப்பீட்டை உருவாக்குவதில் எப்போதும் அளவற்ற மகிழ்ச்சி கொண்ட பிரபஞ்சன் அவர்களுக்கு, இதுவே மிகவும் பொருத்தமான நினைவஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறோம். முதல் நாவலே ஒரு எழுத்தாளரின் கனவு; அந்தக் கனவுக்கு ஒரு சிறிய துணையாக இருக்க வேண்டும் என்பதே இந்தப் போட்டியின் நோக்கம். முதல் நாவலை எழுதியிருப்பவர்களும், தற்போது எழுதி வருபவர்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். மு. வேடியப்பன் டிஸ்கவரி புக் பேலஸ்

கருத்துகள்