இன்று 11.07.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மதுரை சர்வேயர் காலனி அருகே உள்ள கொடிக்குளத்தில் 32-வது முது முனைவர் இறையன்பு கிளை நூலகத் திறப்பு விழா

இன்று 11.07.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மதுரை சர்வேயர் காலனி அருகே உள்ள கொடிக்குளத்தில் 32-வது முது முனைவர் இறையன்பு கிளை நூலகத் திறப்பு விழா நிகழ்விற்கு இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் திருமிகு. பிரசன்னா T. முருகன் அய்யா அவர்கள் தலைமையில், மாநிலத் தலைவர் -பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், முனைவர் வா. நேரு அய்யா அவர்கள் நூலகத்தை திறந்து வைத்தார்கள் மேலும் இவ் விழாவில் வருகை புரிந்த ஏனைய அறிஞர் , சான்றோர் பெருமக்களும் மாணவச் செல்வங்களையும் வரவேற்று இறையன்பு நூலக நிறுவனர் திருமிகு. நா .பார்த்தசாரதி ஐயா அவர்கள் உரையாற்றி னார்கள் அத்துடன் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு அ . ஆதிமூலம் அவர்கள் மற்றும் சித்தர் கிரிதரன் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் கிளை நூலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கிளை நூலகத்தின் பொறுப்பாளரும் மாவட்ட மகளிர் நுகர்வோர் அமைப்பாளருமான திருமதி விஜயலட்சுமி அம்மா அவர்கள் வரவேற்று விழாவிறகுப் பெருமை சேர்த்தார்கள்....

கருத்துகள்