மதிப்புரை நூலின் பெயர் : ‘கலைமாமணி’ கு. ஞானசம்பந்தன் கருவூலம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா, M.A., M.Ed.,
மதிப்புரை
நூலின் பெயர் : ‘கலைமாமணி’ கு. ஞானசம்பந்தன் கருவூலம்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா, M.A., M.Ed.,
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை – 600 017.
விலை : 70 பக்கங்கள் : 68
கவிஞர் இரா. இரவி ஐயா அவர்களின் 39-ஆவது நூல். கவிதைச்சாரலில் தொடங்கிய இலக்கிய பயணம் 39 நூல்கள் வந்துவிட்டது. இது ஐயாவின் கடின உழைப்பின் வெற்றி. இவர் தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறையில் சுற்றுலா அலுவலராக இருந்து பணிநிறைவு பெற்றவர். தமிழ்ச்செம்மல் விருது பெற்ற இவர் ஹைகூ திலகம், கவியருவி, கவிமுரசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவரின் 39ஆவது நூல் கு. ஞானசம்பந்தன் கருவூலம்.
கு. ஞானசம்பந்தன் ஐயா பட்டிமன்றப் பேச்சாளர். மேனால் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியர், நடிகர், எழுத்தாளர். ஐயாவின் பேச்ச நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்க வைப்பதாக அமையும்.
ஞானசம்பந்தன் ஐயாவின் நூல்களை படித்தவற்றில் சிலவற்றை கவிஞர். இரா.இரவி ஐயா மதிப்புரை, தான் எழுதியதை நூலாக வடித்துள்ளார்.
நூலின் அட்டை ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் படமும் அவரின் நூல்களின் படமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முச்சங்கம் வைத்து
முத்தமிழை வளர்க்கும்
இத்தமிழ் நகரில்
நித்தமும் கவிதை எழுதும்
வித்தகக் கவிஞர்
ஹைக்கூ இரவி.
எனப் பாராட்டுகின்றார்.
சினிமாவுக்குப் போகலாம் வாங்க
40 கட்டுரைகள் நூலில் உள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் திரைத்துறைப் பற்றிய வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்தது நல்ல யுத்தி. நூலின் நடை எளிய நடை படித்தவர்களுக்கு புரியும். பாமரர்களுக்குப் புரியும் என்பதாக உள்ளது.
எந்தையும் தாயும்
ஆடம்பரம், சிக்கனம், கஞ்சத்தனம் மூன்றுக்கும் திரு. கு. குருநாதன் அவர்கள் தந்துள்ள விளக்கம் அருமை. சோழவந்தானிலிருந்து மதுரைக்கு 25 மைல் காரில் தான் செல்வோம் என்றால் அது ஆடம்பரம். நடந்தே செல்வோம் என்றால் அது கஞ்சத்தனம். பேருந்திலோ, இரயிலிலோ செல்வோம் என்றால் அதுவே சிக்கனம்.
மேடைப் பயணங்கள்
மேடையில் பேசகின்ற பெருமக்கள் சில உயர்ந்த குறிக்கோள்களை உடையவர்களாக இருக்க வேண்டும். பேசுகிறபோது கீழான சொற்களையோ, வேறு பொருள் தரும்படியான வார்த்தைகளையோ, பிறர் மனம் புண்படும்படியான செய்திகளையோ ஒரு போதும் கூறக்கூடாது என எங்கள் பேராசிரியர் சொல்லிக்கொண்டே இருப்பார் என்று நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இந்த வைர வரிகளை ஒவ்வொரு பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உன்னோடு போட்டி போடு
பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுக்கத் தயங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் தந்து பெயர் கொடுக்க வைத்துப் பேசப் பயிற்சியளித்து முதற்பரிசையும் பெற வைத்த கல்லூரி அனுபவத்தை கட்டுரையில் விவரித்து உள்ளார். தயக்கம் தகர்த்தால் சாதனைகள் புரியலாம் என்பதை உணர வைத்துள்ளார்.
இலக்கியச்சாரல்
சிறுகதை கற்றலும் கற்பித்தலும் கட்டுரையில் சிறுகதையின் தோற்றம் வளர்ச்சி வட்டார எழுத்துக்களும் படைப்பாளிகளும் எழுத்தாளர்களின் பெயர் பட்டியல். சிறுகதை கற்பித்தல் சிறுகதை வளர்ச்சியில் அடுததக்கட்டம் என யாவும் உள்ளன. சிறுகதை பற்றிய புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன.
விடியலுக்கு ஓர் விளக்கு
அவர் குடிப்பார் இவர் குடிப்பார் என்று விளக்குவார்கள்!
எவர் குடித்தாலும் எனக்கு வேண்டாமென்று மறுத்திடு!
என்கிறார் கவிஞர்.
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் எனும் தலைப்பில் இவர் வார்த்தைச் சாட்டைகளால் குடிகாரர்களை எச்சரிக்கும் விதம் புதுமையிலும் புதுமை
மலரும் நினைவுகள்
‘‘தொ. பரமசிவம் சொன்ன வசனம்தான்
கடவுள் இல்லை என்று சொல்லவில்லை
இருந்து இருந்தால் நல்லா இருக்கும்’’ என்று சொல்லிமுடித்தார் கமலஹாசன் என்பது போன்றவை நூலிற்கு மேலும் அழகு சேர்கின்றன.
இந்நூல் முழுவதும் கவிஞர். இரா. இரவி அவர்க்ள கு. ஞானசம்பந்தன் அவர்களின் நூலிற்கான மதிப்புரை ஆழத்தையும் செய்தியை நுட்பமாக எடுத்துரைக்கும் திறனையும் கொண்ட இனிய நூல்.

கருத்துகள்
கருத்துரையிடுக