. *கவிதாஞ்சலி*
கரிசல்மண் பிரசவித்த
கன்னித் தமிழே!
இனி என்றுன்னை
பார்க்கப் போகிறோம்
இனியோர் பாரதிராசா
என்றது சாத்தியம்
துக்கம் உன்னை
சூழ்ந்ததால் சோர்ந்தாயோ
சொல்லவியலா சோகத்தால்
நீ வீழ்ந்தாயோ
ஆயிரமாய் சொந்தங்கள்
அநேகர் இருந்தும்
ஆறுதலை தரவியலா
அந்நிலை ஆனோமே
வைரமே உன்னை
வாகென தக்கவைக்க
வகைதெரியா சொந்தமாய்
வழியின்றி ஆனோமே
உன்வழி இயக்குனர்
ஓராயிரம் உயிரிணையாய்
தன்னுயிர் தந்திடவும்
தயாரா இருந்தபோதும்
தப்பித்தே சென்றாயே
தரைமீது வேதனையோ
இணையில் தமிழனே
என்றுநீ திரும்புவாய்
ஏக்கமாய் ஆனநெஞ்சம்
எண்ணுதே மூடமாய்
உன்னிடம் நிரப்ப
ஒருவரில்லை எங்குமே
மண்ணிலே உன்பெயர்
மலையென நிலைத்ததே
வணங்கிடும் தலைமுறைகள்
வண்ணகுல தெய்வமென்றே!
ஆக்கம்
மைசூர் இரா. கர்ணன்

கருத்துகள்
கருத்துரையிடுக