மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் ! இறவாமல் செய்ய முடியாவிடினும் இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் ! ஆறு நூறு வயது பேதமின்றி அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் ! கற்ற மருத்துவக் கல்வியை கடைசிவரை மறக்காதவர்கள் ! ஓய்வு பெரும் வயதானாலும் ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் ! வாழையடி வாழையென மருத்துவ வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் ! முகம் சுளிக்காமல் எந்நேரமும் முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் ! நேரம் காலம் பாராமல் எந்நேரமும் நேயத்துடன் உயிர் காப்பவர்கள் ! நாடியைப் பிடித்துப் பார்த்தே நலம் நலமின்மை சொல்பவர்கள் ! விழிகளை உற்று நோக்கியே வினாக்களுக்கு விடை காண்பவர்கள் ! இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே இனிதே மருந்து தருபவர்கள் ! விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு ஆபத்து நீக்கி அருள்பவர்கள் ! நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் ! வலியால் துடித்து வாடுபவர்களுக்கு வலிஅகற்றும் வல்லவர்கள் ! இரத்தம் போனவர்களுக்கு உடன் இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் ! இதய நோய் உள்ளவர்களுக்கு இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் ! மனோதத்துவமும் அறிந்து வைத்து மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் ! உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின் மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் ! சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும் சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் ! மனித உயிர்களின் மகத்துவமறிந்த மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் ! நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும் நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் ! மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் ! சாகாமல் காத்திட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் ! பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள் ! எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை ! எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை ! மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் ! மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் ! மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் மேய்ப்பர்கள் உயிர் மீட்பர்கள் மருத்துவர்கள் ! இரவு பகல் பாராது இன்முகமாய் உழைப்பவர்கள் மருத்துவர்கள் ! கத்தியால் அறுத்தும் காப்பார்கள் மருத்துவர்கள் ! ஊசியால் குத்தியும் காப்பார்கள் மருத்துவர்கள் ! பசி துக்கம் தூக்கம் மறந்து பலரின் உயிர் காப்போர் மருத்துவர்கள் ! செவிலியர் துணையுடன் பல்லுயிர் காப்போர் மருத்துவர்கள் ! வாழ்நாளை நீட்டிக்கும் வித்தைக் கற்றவர்கள் மருத்துவர்கள் ! முடிந்தவரை முயன்று மூச்சை நீட்டிப்பவர்கள் மருத்துவர்கள் ! அன்பாய் பேசி வலி நீக்குபவர்கள் மருத்துவர்கள் ! கடின உழைப்பால் உச்சம் தொட்டவர்கள் மருத்துவர்கள் ! பயம் நீக்கி துணிவைத் தருபவர்கள் மருத்துவர்கள் ! போகும் உயிரைப் போராடி மீட்பவர்கள் மருத்துவர்கள் ! முயற்சி திருவினையாக்கும் முற்றிலும் உணர்ந்தவர்கள் மருத்துவர்கள் ! மதி நுட்பம் மிக்கவர்கள் மற்றவர்களைக் காப்பவர்கள் மருத்துவர்கள் ! நலமாக வாழ் நல்லது உரைப்பவர்கள் மருத்துவர்கள் ! ஆலோசனை வழங்கி ஆயுளை வளர்ப்பவர்கள் மருத்துவர்கள் ! உயிர் காக்கும் பணி உன்னதப்பணி புரிவோர் மருத்துவர்கள் ! முன்னாடி வந்திருந்தால் காப்பாற்றி இருப்போம் என்பவர்கள் மருத்துவர்கள் ! காப்பாற்றி விட்டு என்னால் அல்ல இறைவனால் என்பவர்கள் மருத்துவர்கள் ! கடவுளை நம்பாத நாத்திகர்களும் நம்பிடும் மனித தெய்வங்கள் மருத்துவர்கள் !

கருத்துகள்