புகழ்வணக்கம்

இன்னைக்கு ஒரு பதிவு படிச்சேன் அதுல சொன்னது போல... மிகவும் ஆச்சரியமான ஒரு விசயம்... தமிழ் சினிமால ஹீரோன்னா... பெரிய வீரனா இருக்கணும், எல்லாரையும் காப்பாத்தணும், யாரையும் பார்த்து பயப்படக் கூடாதுன்னு இருந்த ஒரு காலத்துல... பயப்படுறவனும் ஹீரோ தான்... தடுமாறுறவனும் ஹீரோ தான்... கொஞ்சம் அப்பாவியா... கொஞ்சம் கோமாளித்தனமா இருக்குறவனும் ஹீரோவா இருக்கலாம்ன்னு நம்ப வச்சவர் நம்ம பாக்யராஜ். அவரோட படங்கள்ல ஹீரோ உலகத்தைக் காப்பாத்த மாட்டார்... ஆனா, மனிதர்களுக்குள்ள இருக்குற சின்னச் சின்ன மனக்கசப்புகள்... உறவுகள்ல வர்ற சிக்கல்கள்... புரியாமையால உருவாகுற வலிகள்... அதையெல்லாம் தான் எதிர்கொள்வார்.... கணவன் மனைவி க்குள் இருக்கும் உறவு சிக்கல்களையும் அவரை மிஞ்சி ஒருவர் கையாண்டது இல்லை.. அதனாலதான் அவர் எடுத்த கதைகள் நமக்குள்ளேயே நடக்குற மாதிரி இருக்கும். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் நம்ம வீட்டுல இருக்குற யாரோ ஒருத்தரை ஞாபகப்படுத்தும். பெண்கள் உளவியலை அழகா கையாண்டவர், அவர் பேசிய மண் சார்ந்த பெண்ணியமும் பெருசு, அவரை எல்லா பெண்களிடமும் கொண்டு சேர்த்தது... சென்னையில் எங்கள் ஏரியாவில் (ஒட்டியம்பாக்கம்) ஒரு பாட்டி உள்ளார்... கணவன் இறந்து, பிள்ளைகள் கை விட்டு, பிச்சை எடுக்காமல் வயித்தை கழுவும் 80 வயது தொட்ட தன்னம்பிக்கை தமிழச்சி களில் அவரும் ஒருவர் எதாவது காய் கறி, வாழைத்தண்டு, இப்படி கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்து தருவார்... அதற்கு பல மடங்கு அதிகமாக அவருக்கு பணம் தருவது எங்கள் வழக்கம்... வேண்டாம் என சொல்லுவார் வலுக்கட்டாயமாக தருவேன்... அவருக்கு வேண்டியது சிலதும் தருவோம்...ஒவ்வொரு ஞாயிறும் மதியம் வீட்டுக்கு சாப்பாட்டு க்கு வர சொல்லி இருக்கிறேன்... வீட்டிலும் அசைவ குழம்பு எப்படியும் இருக்கும்.. அவருக்கு நல்ல சாப்பாடு வழங்கலாமே தவிர நானும் கொஞ்ச நேரம் அவரிடம் பேசலாம் என... இந்த வயதில் நிலையில் யாராவது கொஞ்ச நேரம் வாஞ்சையாக அவர்களிடம் பேசுவது தான் அவர்கள் வேண்டும் ஒரே விசயம்!! இன்று முற்பகல் வந்தார்... முகம் வாடி இருந்தது... என்னை கூப்பிட்டு அருகில் உட்கார சொன்னார்... திண்ணையில் உட்கார்ந்தேன் அவருக்கு ன்னு ஒரு அழகான சென்னை தமிழ் இருக்கும்.. அதில் "கண்ணு பார்த்தியா... பாக்யராஜ் செத்து போயிட்டாரு..." "ஆமா..." உடனே அவர் இறப்பு பற்றி அறிந்தது எல்லாம் பொருமி தள்ளினார்... "நல்லா தான் இருந்தாராம்..." என கடகடவென... கண்களில் ஓரம் நீர்... "எப்படி எப்படியெல்லாம் படம் தந்து இருக்காரு... தங்கமான மனுஷன்... எனக்கெல்லாம் ஒரு சாவு வர மாட்டேங்குது.. அவருக்கு வந்துருச்சே.. நல்லவங்க எல்லாம் போய் சேர்ராங்க..." என சொல்ல சொல்ல கண்ணீர் வாழ்க்கையில் நேரில் ஒருமுறை கூட பார்க்காத ஒரு நபர் க்கு கண்ணீர் விட வைக்கும் - அது தான் கலை ஒரு படைப்பு என்ன செய்யும் ஒரு கலைஞன் என்ன செய்வான் என்பதற்கு ஒரு சாம்பிள் இது இனி இப்படிப்பட்ட திரைக்கதை சொல்லி இல்லை... ஆனா, அவர் விட்டுட்டுப் போன கதைகளும்... கதாபாத்திரங்களும்... தமிழ் சினிமா இருக்குற வரைக்கும் உயிரோடவே இருக்கும். இன்னும் உயிரோடு இருப்பது தெரியாமல் இறந்துவிட்டார் - இரா. இராஜகோபாலன்

கருத்துகள்