புகழ்வணக்கம்

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.* புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு* *********************************** *பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி*: *உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்*? *அவரது பதில்*: *ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு, வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்*. *தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்*. *அதோ அதுதான் உனக்கான தண்ணீர் என்று சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க*, *உயர்சாதிக்காரர்கள்*. *அவன் மட்டுமல்ல, அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று நோட்டுப் புத்தகத்தை திருத்த மறுக்கிறார் ஆசிரியர்*. *முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத்தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான்*. *அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான்*. *வடமொழியைப் பாடமாய் எடுத்து படிக்க விரும்பினப்போ, இந்து தர்மம், கல்விச்சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு*. *பதினாறு வயதில் அவனுக்கு திருமணம் நடக்குது*. *தீண்டத்தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாதுன்னு, ஒரு விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய், இரவில் நடக்குது அந்த ஏழையின் திருமணம்*. *இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவர் தான், இந்திய அரசியலமைப்பை வடிவமைத்திருக்கிறார்*. *இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சுதந்திர இந்தியாவில் இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்*. *பட்டொளி வீசி பாரதத்தின் அடையாளமாய் விளங்கும் தேசியக்கொடியை வடிவமைத்திருக்கிறார்*. *சேறும், சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமா*? *அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன்* *அண்ணல் அம்பேத்கர் அவர்கள்*. *அவரே எனக்கு பிடித்த மகாத்மா*

கருத்துகள்