Anisha Maraikayar
தூறல் நின்னே போச்சி சார் …
ரஜினி கமல் ஒருபுறம் வித்தியாசமான படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது 80 களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த பாக்யராஜை எனக்கு நினைத்தாலே அவருடைய பெல்பாட்டம் பேன்ட்ம் பெரிய கட்டமிட்ட சட்டையும் கர்லிங் சுருள் முடி பெரிய கிருதா தான் நினைவுக்கு வரும்.
நான் பிறப்பதற்கு இரு வருடங்களுக்கு முன்பு வந்த தூறல் நின்னுப்போச்சி படத்தில் சுலக்ஷனாவை பொண்ணுப்பார்க்க போகும் போது கழுத்தில் ஒரு மஃப்ளர் துணியை சுற்றியிருப்பார். டிராக்டரில் பேகிபேன்ட் மஃப்ளர் துணியுடன் செல்லும் அவரை பொண்ணுவீட்டில் மாப்ள என்ன படித்திருக்கிறார் என கேட்பார்கள். பியுசி மட்டும் மூணுவருசம் படிச்சாப்ள என சொல்லும் போது பாக்யராஜ் ஒரு மாதிரியாக முழிப்பார். பாக்யராஜ் படங்களில் அவர் கேரக்டருடன் ஒரு துணைப்பாத்திரம் இருக்கும். ‘பசி’ நாராயணன் , ‘கல்லாபெட்டி சிங்காரம்’ அந்த ஏழுநாள் படத்தின் காதர் இவர்களை வைத்து தனது பெர்சனாலிட்டியை பகடி செய்யும் ஸ்டைல் பாக்யராஜ்க்கு உரித்தது.
80 களின் மொத்த உருவமாக ‘இன்றுபோய் நாளை வா’ இருந்தது. பக்கத்துவீட்டுக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணை உஷார் செய்ய துடிக்கும் மூன்று இளைஞர்களின் கதை என்றாலும் பாக்யராஜ் வெள்ளை பேகிபேன்ட்ம் கருப்பு பூ போட்ட சட்டையுமாக ராதிகாவிடம் ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு தெருமுக்கத்தில் பேசிக்கொண்டிருப்பார். அங்கு இளையராஜாவுடைய ஒரு பிஜிஎம் இருக்கும். எல்லா மாஸ்டர்களும் சேர்ந்து பிடித்த சிலை போல அப்படியொரு காட்சி.
யாரும் தொடாத களங்களை அநாயசமாக தொடுவதில் பாக்யராஜை அடித்துக்கொள்ள முடியாது. பொய்சாட்சி படத்தில் கோவில் குளத்தில் சாமியை கும்பிட்டுவிட்டு கோவில்குளத்திலேயே காசு திருடுவதும் ஒரு சைக்கிள்கடையில் வேலைக்கு போய் சேர்வார். ஓனர் வாடகை சைக்கிளை திறக்கமுடியாமல் திணறுவார். பாக்யராஜ் அநாயசமாக அந்த பூட்டை திறந்துக்கொடுப்பதும் அதை பார்த்து திகைத்துப்போய் நீ வேலைக்கு வேண்டாமென அனுப்பிவைப்பதுமாக இருக்கும். அப்படத்தில் பசுமாடுகளை வைத்து நிலத்தை உழுவும் காட்சி பட்டினத்தில் இருப்பவர்கள் விவசாயத்தை எப்படி பார்க்கறார்கள் என்பதை தத்ரூபமாக விளக்கியிருப்பார்.
இன்று வேண்டுமெனில் Money Heist படத்தில் வரும் முகமூடி வங்கி கொள்ளையரை பார்த்து மிரண்டிருப்போம். 90 களில் பாக்யராஜ்ன் மிக முக்கியமான வங்கி கொள்ளைப்படம் ‘ருத்ரா’ மிக சாதுர்யமாக ஒரு வங்கிக்கொள்ளைக்குள் சிக்கிக்கொள்பவர்களிடத்தில் அப்போதைக்கு தோன்றும் முன்முடிவுகளை வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கியிருப்பார். இதோட விளைவு என்னானு தெரியுமானு இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி அவரிடம் கேட்கும்போது அதப்பத்திஎல்லாம் பின்னாடி பாக்கலாம் என தனக்கு தோன்றும் புத்திசாலி புள்ளிகளை வைத்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை அசாத்தியமாக ஒரு திரைக்கதை உருவாக்கியிருப்பார்.
80 களில் ஒருமாதிரியான பாக்யராஜ் என்றால் 90 களில் இன்னொரு வித்தியாசமான பாக்யராஜ் - தனது மகன் சாந்தனுவோடு நக்மா நடித்த படம் ‘வேட்டியமடிச்சு கட்டு’ ஒரு கோழையான அப்பா தனது மகனிடம் வீரனாக காட்டும் படம், ஞானப்பழம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற படங்கள் எங்கள் பால்யத்தை நிறைத்திருந்த காலம். அதன் பிறகு எனது கல்லூரி காலத்தில் விஜய்காந்த் நடிப்பில் ‘சொக்க தங்கம்’ எதார்த்த சினிமா திரைக்கதையுடன் இன்னொரு முறை பாக்யராஜ் தன்னை இயக்குனராக நிரூபித்த தருணம் அது.
இன்றும் எங்கேயாவது கிராமத்தில் சென்றுக்கொண்டிருந்தால் ‘மூக்குத்திபூ மேலே’ பாடலை கேட்கும்போது - ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்’ ‘டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே பேரின்பம்’ எனும் பாடல் கேட்கும்போதும், ‘செங்கரும்பே நான் மறந்து வேலி முள்ள ஏன் புடிச்சேன்’ என கல்பனாவுடன் கண்ணாடியை கழற்றி பாடும்போதும் ‘ஏரிக்கரை பூங்காற்றே..’ பாடலில் நெருப்பு வெளிச்சத்தில் ‘ஓடிப்போகும் வான்மேகம் நிலவ மூடிக்கொள்ள பாக்குதடி..’ என சிவந்த கண்களுடன் பாடிவரும் பேகிநாயகன் நம்மிடமிருந்து விடைபெற்றார் என்பது தமிழ்சினிமாவின் பெரும்தூண் விடைப்பெற்று கொண்டது என புரிந்துக்கொள்ள முடிகிறது.
ஆழ்ந்த இரங்கல் சார்..

கருத்துகள்
கருத்துரையிடுக