உரைகல்லின் உரைக்கோவை
***********************************
சூன் 27
========
ஹெலன் கெல்லர்
===============
பிறந்த தினம் ஜூன் 27- 1880
நினைவு தினம் ஜூன் 1-1968
**மாற்றுத் திறனாளி ஹெலன் கெல்லர்.
**உலகிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கெல்லாம் ஒளிவிளக்காகத் திகழ்கிறார் ஹெலன் கெல்லர்.
**தன்னம்பிக்கையின் மறு உருவம் ஹெலன் கெல்லர்
**வியந்து போற்றும் பெண்மணி ஹெலன் கெல்லர்
**கண் பார்வையில்லாமலும் காது கேளாமாலும் இருந்தவர் ஹெலன் கெல்லர்.
**தன் உடைய தன்னம்பிக்கை விடாமுயற்சியாலும் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தவர்.
ஹெலன் கெல்லர் வாழ்க்கை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹெலன் கெல்லர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார்.
1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தஸ்கம்பியா எனும் சிற்றூரில் பிறந்தார்.ஹெலன் ஆடம்ஸ் கெல்லருக்குப் பிறவியில் குறைகளேதுமில்லை. பதினெட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் தம் பார்வையை, பேசும், கேட்கும் திறனை இழந்தார்.இவர் இள வயதிலேயே கண் பார்வை கேட்கும் திறன் பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.
ஹெலன் கெல்லர். இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டு முக்கிய புலன்களை இழந்த ஹெலன் கெல்லர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் மருண்டு போயிருந்தார். பின்னர் ஹெலன் கெல்லருக்கு நிபுனத்துவ உதவி தேவை என்று நம்பிய பெற்றோர் வாஷிங்டென் சென்று அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் காது கேளாதருக்கான நலனிலும் கல்வியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.
ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன் கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் தன் முழு உத்வேகத்தையும் காட்டி, ஹெலன் கெல்லருக்கு வாழும் கலையைக் கற்பித்தார் ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு ஒளியையும் ஒலியையும் கற்றுத் தந்தார்.பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர் கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
49 ஆண்டுகள் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு தாயாய், தாதியாய், சகோதரியாய், சிநேகிதியாய், ஆசிரியராய், பார்வையுமாய் வாழ்ந்து பெரும் சாதனை புரிந்தார்.
கெல்லருக்கு பேசக் கற்றுத்தர ஷேரபுலா என்ற ஆசிரியை உதவினார். தனது ஆசிரியை ஷேரஃபுலா பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளை தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர்.தட்டுத் தடுமாறி பேச அவர் பல ஆண்டுகள் சிரமபட்டு பயிற்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட மனம் தளரவில்லை ஹெலன் கெல்லர்.
ஆன் சல்லிவனைவின் உதவி உடனும் முயற்சி உடனும் உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார்.கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.
1903 ஆம் ஆண்டு கெல்லர் தனது கல்லூரி நாட்களிலேயே தி ஸ்டோரி ஆஃப் மை லைப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார். கெல்லர் தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதிஉள்ளார்.ஹெலனின் படைப்புகள் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.
1905 இல் ஆன் சல்லிவன், மாபெரும் இலக்கிய விமர்சகரும் பொதுவுடைமைவாதியுமான ஜான் மேஸியைத் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம், ஹெலனின் வாழ்க்கையிலோ ஆன் சல்லிவனுடனான ஆசிரியர் மாணவி உறவிலோ எந்தப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. மாறாக அவர்கள் இருவரும் இணைந்து ஹெலனின் படிப்புக்கு பெரிதும் உதவினர். ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியை பள்ளிகளுக்கு வழங்கினார் கெல்லர்.இவர் பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார்.
1919 ஆம் ஆண்டு அவரது கெல்லரின் கதை ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டபோது அந்தப் படத்தில் நடித்தார் கெல்லர். அமெரிக்காவில் கண் பார்வையற்றோர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் அதிகாரப்பூர்வ பேச்சாளாராக கெல்லர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக உடல் ஊனமுற்றோருக்காக பேசிய கெல்லரைப் பல நாடுகள் பேச அழைத்தன.
ஸ்காட்லாந்தின் லாஸ்கோ பல்கலைக்கழகம் 1932 ஆம் ஆண்டு கெல்லருக்கு கௌவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.இவரின் அறிவையும் சாதனையையும் கண்ட டெம்பிள் பல்கலைக்கழகம், ஹார்வேர்டு பலகலைக்கழகம், ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகம் இந்தியாவின் தில்லி பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளரவ முனைவர் பட்டங்களை அளித்து பெருமை சேர்த்தன.
ஹெலன் கெல்லர் இரண்டாம் உலகப்போரின்போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி ஊக்கமூட்டினார். தன் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களை சந்தித்து பேசியிருக்கிறார் கெல்லர். 1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் கெல்லருக்கு வழங்கப்பட்டது.
கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது.
1968 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87 ஆவது வயதில் காலமானார். உறக்கத்திலேயே கெல்லரின் உயிர் அமைதியாக பிரிந்தது.
1999 ஆம் ஆண்டு கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக அறியப்பட்டார்.
2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது.
இந்தியாவின் மைசூரில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய்பேசாதோர் மற்றும் காதுகேளாதோருக்கான முன்பருவப் பள்ளிக்கு ஹெலன் கெல்லருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
2009 அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மேலும் ஹெலன்கெல்லர் முதன் முதலாக ஏழு வயதான போது ஆன் சல்லிவனுடன் தண்ணீரைத் தொட்டுணர்ந்து தண்ணீர் என்பதற்கான பொருளை ஊணர்ந்த அக்காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரெய்லி எழுத்துகளில் உலகிலேயே எங்கும் காணமுடியாத தொட முடியாத இதயத்தால் உணரப்பட்ட அழகிய பொருள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் மாற்றுத் திறனாளிக்கு அதுவும் குழந்தைப் பருவத்தில் தலைநகரில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஹெலன் கெல்லர் செப்பிய பொன்மொழிகள்
**மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
**ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
* தொகுப்பு ....முருகுவள்ளி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***கட்டுரை தொகுப்புகள் மற்றும் நூல்களில் இருந்தும் இணைய தளங்களில் இருந்தும் எடுத்து சேர்த்த தரவுகள். கவிஞர் இரா .இரவி இரா.இரவி Poet Eravi குறைவாகக் காண்க

கருத்துகள்
கருத்துரையிடுக