படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

மதுரை ராஜா – உங்களுக்குத் தெரியுமா? (மிக முக்கியமான செய்தி) சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலக கட்டிடம், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது அல்ல. செயின்ட் சார்ஜ் கோட்டை - இது ஆங்கிலேயர் கட்டிய முதல் கோட்டை. இதைக் கட்டுவதற்கு முன்பாக, இந்த பகுதி எல்லாம், சாதாரண மீன் பிடி கிராமமாக இருந்தது. தாமராத வெங்கடாத்திரி நாயுடு என்ற ஆந்திர மன்னருக்கு சொந்தமான இந்த நிலத்தை, கிழக்கிந்திய கம்பெனியர், விலைக்கு வாங்கினர். இந்த இடத்தை வாங்கிக் கொடுத்த சென்னப்ப நாயக்கரின் நினைவாகத் தான், இது சென்னை என்று பெயர் பெற்றது. (பிற்காலத்தில், மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தான், இது தமிழ்நாட்டிற்கு சொந்தமானது) ஆர்மீனியர்கள், தங்களது ஆலயத்தில் உள்ள மேரி மாதாவை, “மேட்ரிடயஸ்...” என்று அழைத்து வணங்கினர். அதனால், சென்னை பட்டணம், மெட்ராஸ் ஆக மாறியது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ஆங்கிலேயரின் குடியிருப்புகள், ராணுவ பீரங்கிகள், அங்கு ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் ஏராளமான நினைவுச் சின்னங்கள், தற்போதும், அந்தக் கோட்டைக்குள் உள்ள கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பலரை இங்குள்ள சிறைச்சாலையில் வைத்திருந்தனர். இதற்குள் ஒரு சுரங்கப் பாதையும் இருக்கிறது. சமீபத்தில் தான், அது வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இங்குள்ள சிறைச்சாலையில் தான், ராமநாதபுர மன்னர், முத்துராமலிங்க சேதுபதி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு, பின் அந்த சிறையிலேயே மாண்டார். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை, தற்போது மத்திய தொல்லிய துறை பாதுகாத்து வருகிறது.(Archeology Survey of India) அதனால், இநத்க் கோட்டையில் உள்ள கட்டிட பகுதிகளை எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. மேலும், இந்த கோட்டையில், இந்திய ராணுவ கூட்டு படையின் ஒரு பிரிவும் செயல்படுகிறது. தற்போதுள்ள, தமிழக அரசு தலைமை செயலகம், வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனுடைய ஆண்டு வாடகை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ஒரு ரூபாய்.....! இந்த வாடகையைத் தான், தமிழ்நாடு அரசு, இன்று வரை செலுத்தி வருகிறது. -மதுரை ராஜா-

கருத்துகள்