Mehar Nithyan
8ம.நே ·
மனநல சிகிச்சைக்கு (Psychotherapy) முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது
சமீபத்தில் ஒரு தந்தை தனது மகனை என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அந்த இளைஞர் கடுமையான மனச்சோர்வு (Depression) அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை முழுமையாக மதிப்பீடு செய்தபின், அவருக்கு தொடர்ச்சியான உளவியல் சிகிச்சை (Psychotherapy) தேவைப்படுவதாகவும், குறைந்தபட்சம் 20 அமர்வுகள் உதவியாக இருக்கும் என்றும் பரிந்துரைத்தேன்.
பின்னர் அவர்கள் ஒரு மருத்துவரை சந்தித்தபோது, “இதற்கெல்லாம் செஷன் தேவையில்லை, மக்களோடு பேசினால் சரியாகிவிடும்” என்று கூறப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு ஒரு முக்கியமான கேள்வியை மட்டுமல்லாமல் இந்த துறைக்கான மதிப்பை அதனால் ஏற்படும் சமூக மாற்றத்தை உணர்த்த வேண்டிய அவசியத்தை என்னுள் ஏற்படுத்தியது.
மனிதன் அடிமைபட்டிருந்த காலத்தில் அவனுக்கு புரிதல் தேவைபடவில்லை. வாழ்வதே சிரமம், அடிமையை ஏற்றுகொண்டான். இன்று ஒவ்வொன்றையும் புரியவைக்கும் பொறுப்பில் இருக்கும் சிலர் மீண்டும் மனிதனை மருந்துகளில் அடிமைபடுத்த ஊக்குவிப்பதன் நோக்கம், அவர்களுக்கு தெரியவில்லையா, அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா?
மனநலத்தை பாதுகாத்தல் உடல்நலத்திற்கு இன்றியமையாதது என்று படிப்பளவில் வளர்ந்துவிட்ட நம் நாட்டில், பயிற்சியளவில் மாற மருத்துவர்களின் தேவை இன்றியமையாததாகிறது. ஆனால் மருத்துவர்களோ நீங்கள் உளவியலாளரை சந்தியுங்கள் என்று சொல்வதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள்.
நான் சேலத்தில் 2015 முதல் 2018 வரை அனைத்து மருத்துவமனையும் சென்று Psychotherapist பணிக்காக அணுகினேன். ஒருவரும் மதிக்கவில்லை என்று சொல்லமுடியாது, உள்ளேயே அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். கடைசியாக ஒரு மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் என் profile பார்த்து மகிழ்ச்சியடைந்து என்னிடம் சொன்னார். அவரது தாய் எப்பொழுதுமே சொல்வார் psychotherapy ஒவ்வொரு patient க்கும் முக்கியம் என்று என்பதை பகிர்ந்தார். எனக்கான வேலை அங்கே கிடைத்தது.
என்னிடம் அங்கே admit ஆகியிருக்கும் patients ஐயும் பார்க்கும்படி சொன்னார். ஒருமாதம் நிறைய positive feedback . கடைசியாக ஒரு மருத்துவர் என்னுடைய patient க்கு இவையெல்லாம் தேவை இல்லை என்று சொல்ல , விசாரிக்கையில் patient ன் ஏழு நாள் admission நான்கு நாளாக குறைந்தது அவரை மனவருத்தத்தில் கொண்டு சென்றதாகவும், ஏனெனில் hospital management அவரிடம் ஒவ்வொரு patientம் ஏழு நாள் treatment எடுத்துகொள்வதை மருத்துவர் உறுதி செய்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர்களின் வேலை கேள்விக்குறி என்பதும் நான் அறிந்தேன். இதை அறிந்து அந்த மருத்துவமனையில் இருந்து நானே வெளியேறிவிட்டேன்.
உடல் நோய்களுக்கு மருந்து அவசியம் என்றால், மன வேதனைக்கு மனநல ஆதரவும் அவசியமல்லவா?
ஒருவர் மனஅழுத்தம், மனச்சோர்வு, பயம், பதட்டம், தன்னம்பிக்கை குறைவு, உறவு பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது, அவருக்கு வெறும் அறிவுரைகள் மட்டும் போதாது. அவர் தனது உணர்வுகளை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளவும், தனது பிரச்சினைகளின் மூல காரணத்தை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையை மீண்டும் ஆரோக்கியமாக எதிர்கொள்ளவும் தொழில்முறை மனநல வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
மருந்துகளுக்கும் மனநல சிகிச்சைக்கும் எதிர்மறையான உறவு இல்லை. இரண்டிற்கும் தனித்தனி முக்கியத்துவம் உள்ளது. பல நேரங்களில் மருந்தும் மனநல சிகிச்சையும் இணைந்து செயல்படும்போது தான் சிறந்த மாற்றங்கள் உருவாகின்றன.
தமிழ்நாட்டில் மருத்துவத் துறையும் மனநலத் துறையும் இணைந்து செயல்படும் கலாச்சாரம் மேலும் வலுப்பெற வேண்டும். நோயாளியின் முழுமையான நலனே அனைவரின் இலக்காக இருக்க வேண்டும். ஒரு மருத்துவர், ஒரு மனநல நிபுணர், ஒரு செவிலியர், ஒரு சமூகப் பணியாளர் — அனைவரும் ஒரே அணியாக செயல்பட்டால், நோயாளியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
இன்று தமிழகத்தை ஆரோக்கியமான, கல்வியறிவு மிக்க, உற்பத்தித்திறன் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் அனைவரிடமும் உள்ளது. அதற்கு உடல்நலத்துடன் மனநலத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
எனவே, தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை, இணைந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல ஆலோசகர்கள் மற்றும் மனநல சிகிச்சை நிபுணர்களை அதிகளவில் நியமித்து, மனநல சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவது மருந்து மட்டும் அல்ல; சில நேரங்களில் அவன் மனதை யாரோ ஒருவர் உண்மையாகக் கேட்பதும் மாற்றுகிறது.
மனநலம் ஒரு ஆடம்பரம் அல்ல. அது ஒரு அடிப்படைத் தேவை.
உளவியலை அனைவரும் கற்றுகொள்வோம். சமுதாய மாற்றத்திற்கு நம் மன ஆரோக்கியமே முக்கியம்
https://chat.whatsapp.com/HFCiRmb9KZyLYfgxZ6qVJA?s=cl&p=i...
Dr. Mehar Nithyan, PhD. Psychology
Director - Calmscious Psychotherapy Clinic
@918838428286

கருத்துகள்
கருத்துரையிடுக