புகழ்வணக்கம்

ரா. ராஜகோபாலன் ஊரில் ஓரமாக வாழும், குடிசை பகுதி தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு , உயர்த்தப்பட்ட சாதி ஊர் பெரியவரை சந்திக்க ஊருக்குள் ஓடுகிறார்கள்... அழுதபடியே அவர்களின் குடிசைகள் தீ க்கு இரையானதை சொல்கிறார்கள்... ஊர் பெரியவருடன் இருந்தவர் ஒருவர் , அந்த மக்களை திட்டுகிறார்.. எல்லாவற்றுக்கும் இவரே உதவ முடியுமா என்கிறார்... பெரியவர் குறுக்கிட்டு அந்த நபரை கண்டிக்கிறார்... எவ்வளவு செலவாகும்..என விசாரித்து எல்லா செலவையும் நானே ஏற்றக் கொள்கிறேன் என்கிறார்.. கண்ணீருடன் மக்கள் அவரை வணங்குகின்றனர். பெரியவர் சொல்லி நகர்ந்து செல்லும் போது, அவரின் மேல் துண்டு கீழே விழுகிறது...இதை கண்ட அங்கிருந்த தாழ்த்தப்பட்ட சாதி சிறுவன் ஓடிவந்து அந்த துண்டை எடுத்து பெரியவரிடம் தர முற்ப்படுகிறான்.. அவனுடன் வந்த மக்களுக்கு இது எவ்வளவு பெரிய தவறு (?) என புரிகிறது பெரியவர் முகம் வாடுகிறது... அந்த துண்டை நீயே வெச்சுக்கோ என சொல்லி நகர்கிறார் ஒரே காட்சி... நம் சமூகத்தின் பெருமதிப்பும் பேரவலமும் ஒன்று சேர உணர்த்தப் படுகிறது தன் சக்திக்கு மீறி ஏழைகளுக்கு உதவ முன்வருபவர்களை நல்லவர் என்றே இந்த உலகம் சொல்லும்... ஆனால் அவர்களில் பலரும் சாதிய தீண்டாமை பார்ப்பவர்கள், சமூகநீதி போற்றாதவர்கள் ..இதே இந்த சமுதாயத்தின் சாபக்கேடு, என பொட்டில் அறையும் காட்சி இது. இப்படி காட்சி வைக்க தனி திறமை மட்டுமல்ல..தில்லும் வேண்டும்!! எழுத்து - One and Only K.பாக்யராஜ் திரைக்கதை எழுதுவதில் முடி சூடா மன்னர் பாக்யராஜின் எழுத்துக்கு ஒரு பானை சோத்து பதம் இந்த காட்சி. - இரா. இராஜகோபாலன் One of the finest Indian screenplay writers ever சென்று வாருங்கள் ஐயா... இந்திய சினிமா உள்ளவரை உங்கள் பெயர் இருக்கும்

கருத்துகள்