மங்கா தமிழ் பாடு! மங்கலமாய் விடியும் பாரு!! கவிஞர் இரா. இரவி !

மங்கா தமிழ் பாடு! மங்கலமாய் விடியும் பாரு!! கவிஞர் இரா. இரவி ! ***** மாண்புகள் மக்க மங்காத தமிழ் பாடு மண்ணின் முதல் மொழியாம் தமிழினைப் பாடு ! மற்ற மொழிகளுக்குச் சொற்கள் தந்த தமிழ் பாடு மற்ற மொழிகளின் தாய்மொழியாம் தமிழ் பாடு ! பல்லாயிரம் ஆண்டுகளாகிய பண்டைத் தமிழ் பாடு புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நிறைந்த தமிழ் பாடு ! இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ் பாடு எண்ணிலடங்காத சொற்களின் அரங்கம் தமிழ் பாடு ! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய தமிழ் பாடு கற்கண்டு சொற்சுவை நிறைந்த நம் தமிழ் பாடு ! காவியங்கள் காப்பியங்கள் படைத்திட்ட தமிழ் பாடு கண்டவர்கள் வியக்கும் கன்னித் தமிழ் பாடு ! பன்னாட்டு மொழியாம் ஆட்சிமொழியாம் தமிழ் பாடு பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் பைந்தமிழ் பாடு ! ஓலைச்சுவடித் தொடங்கி கணினி வரை சிறந்த தமிழ் பாடு உலகெலாம் உணர்ந்திட்ட ஒப்பற்ற தமிழ் பாடு சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமைமிகு தமிழ் பாடு சங்கத்தமிழுக்கு ஈடுஇணை இல்லாத தமிழ் பாடு ! சொல்லில் அடங்காத சுவைமிக்க தமிழ் பாடு சொக்க வைக்கும் சுந்தரத் தமிழ் பாடு ! உலகம் முழுவதும் ஒலித்திடும் ஒப்பற்ற தமிழ் பாடு உலகத் தமிழர்கள் கொண்டாடி மகிழும் தமிழ் பாடு ! பகைவர்களைத் தவிடுபொடியாக்கிடும் தமிழ் பாடு பகைமையை எதிர்கொண்டு வெல்லும் தமிழ் பாடு !

கருத்துகள்