அவ கையால ஒரு கப் காபி.. அவளோதான் வாழ்க்கை"
~“ஒருநாள் நானும் என் தங்கையும் எங்கேயோ போயிட்டு தேனி வீட்டுக்கு வந்துட்டு இருந்தோம். பூக்கடையில் ஒரு பெண் நிக்குது. வண்டிய நிறுத்தினேன். பூக்கடையில் அந்தப் பொண்ணு எதோ வாங்கிட்டு இருந்தா. அவளின் பின்புறம் மட்டும் பார்த்துட்டு என் சிறு வயது காதலி மாதிரி இருக்கே என்னு தங்கையிடம் சொன்னேன். அவ திரும்பி பார்த்ததும் yes ஆமா அது அவளே தான். எப்படி இத்தனை நாள் கழிச்சு தலை நரை முடி வந்த பிறகும் சரியா சொன்னீங்கன்னு தங்கை கேட்டா. அதான் லவ்.”
~அந்த அம்மா கிட்ட வந்து பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தேன்னு சொல்லுச்சு. கண்ணீரோட கலங்கிட்டேன். அப்பறம் ஒருநாள் வீட்டுக்கு வந்துச்சு. கல்யாணத்துக்கு வந்திருங்கன்னு சொன்னுச்சு. காபி சாப்பிடறியாம்னு கேட்டேன்..
அந்தம்மாவே எனக்காக அடுப்படி போயி காபி போட்டு வந்து கொடுத்துச்சு. அந்த காபி வாங்குனே பாருங்க.. அங்கேயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு. அவ கையால ஒரு கப் காபி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அது போதும் அவ்ளோதான் காதல். அந்த நினைவு இன்னும் என் மனசில் ஈரமா இருக்கு”
(இயக்குநர் ஹௌதம் மேனன் உடனான நேர்காணலில் இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்த காதல் கதை)
❤️ ஒரு கப் காபியில் மறைந்திருக்கும் காதல் எவ்வளவு அழகானது! 💕

கருத்துகள்
கருத்துரையிடுக