28.6.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 47

28.6.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 47 தலைப்பு: மங்கா தமிழ் பாடு ! மங்கலமாய் விடியும் பாரு ! மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது. மங்கா தமிழ் பாடு ! மங்கலமாய் விடியும் பாரு ! எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் ,துணைத் தலைவர் முனைவர் இரா. வரதராசன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. ,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார் .பொருளாளர் கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் . முனைவர் இரா. வரதராசன் தலைமையில் கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம்,புலவர் முருகுபாரதி , கு .கி கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , அஞ்சூரியா க .ஜெயராமன் , சோ .தமிழன்பன் பா..பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,அராபிய கிரிதரன் ,இதயத்துல்லா ( இளையான்குடி ) கவிக்குயில்கள் லிங்கம்மாள், செ. அனுராதாஆகியோர் கவிதை படித்தனர் . கவிக்குயில் செ.அனுராதா எழுதிய" ஆறுபடையோனும் ஆட்கொண்ட சித்தர்களும் " நூல் வெளியிட்டனர் , சிறப்பாக கவிதை பாடிய செ.அனுராதா ,ந .சுந்தரம் பாண்டி ஆகியோருக்கு கவிமாமணி தென்னவன் நினைவு விருது வழங்கினார்கள் . , கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் . படங்கள் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

கருத்துகள்