முனைவர் இறையன்பு அவர்களின் வழிகாட்டலில் நடைபெறும் முதல் தலைமுறை அறக்கட்டளை, கண்ணகி நகர்வாழ் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றைச் சமீபத்தில் நடத்தியது. அப்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களைத் தொழிலாளர் நல வாரியத்தில் இணைத்துக் கொள்ளாமல் இருந்தது தெரிய வந்தது. நல வாரியத்தினால் கிடைக்கும் பயன்களை அவர்களுக்கு விளக்கிக் கூறிய முனைவர் இறையன்பு, அவர்கள் அனைவரும் வாரியத்தில் பதிவு செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அவ்வாறு பதிவு செய்த 117 ஆட்டோ ஓட்டுநர்களுக்கான அடையாள அட்டைகளை முனைவர் இறையன்பு அவர்கள் இன்று வழங்கினார். அப்போது தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆணையர் ஜெய்சங்கர், முதல் தலைமுறை அறக்கட்டளையின் நிறுவனர் மாரிசாமி, இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்