வெயில் தணிந்த பின்
போகச் சொல்வார்கள்.
மழை நின்ற பின்
போகச் சொல்வார்கள்.
எதுவும் தணியுமுன்
எதுவும் நிற்கு முன்
போய்க்கொண்டே இருங்கள் .
உங்கள் நெற்றியும் கன்னமும்
மழை விழுந்து தெறிக்கும் படியும்
உங்கள் புறங்கைகளின் மேல் தோல்
வெயிலில் பிசுபிசுக்கும் படியும்
தரப்பட்டிருக்கின்றன.
குடை வைத்திருக்கும் பைத்தியக்காரர்களை
இதுவரை யாரும் பார்த்திருக்கிறோமா
- வண்ணதாசன்
#வண்ணதாசன் #கல்யாண்ஜி

கருத்துகள்
கருத்துரையிடுக