படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! மதுரை பாபாராஜ்

நம்பிக்கையுடன் நடைபோடு! வாழ்க்கை என்பது வாழத்தான் உழைத்தால் வாழ்க்கை உயருந்தான் சூழ்நிலை சுற்றி வளைத்தாலும் தூண்டில் போட்டே இழுத்தாலும் கோழை யாக மாறாதே! கூச்சல் போட்டே ஓடாதே! மலையைப் போல நின்றிடுவாய்! மலைப்பைத் தூக்கி எறிந்திடுவாய்! நிலையைப் புரிந்தே செயல்படுவாய்! கலங்காமல் நின்றே வென்றிடுவாய்! வாய்ப்புகள் வந்து போகட்டும் ஒன்று போனால் இன்னொன்று! முற்றிலும் நிலைகள் மாறிவிடும்! முன்னேற் றங்கள் ஊறிவரும்! நம்பிக்கையோடு நடைபோடு! நாலையும் நன்றாய் எடைபோடு! பயிற்சியை முயற்சியை மூச்சாக்கு! நாளும் வெற்றியை வீச்சாக்கு! மதுரை பாபாராஜ் 9003260981 ChatGPT Walk Forward with Confidence! Life is meant to be truly lived, Through tireless work, new heights are achieved. Though circumstances tighten around, Though hooks may pull and drag you down, Never surrender into fear, Never run in panic or tears. Stand firm like a mighty hill, Throw away despair with iron will. Understand your place and act with grace, Stand unshaken — victory you shall embrace. Let opportunities come and go, If one departs, another will show. Situations never remain the same, Progress will rise like a growing flame. Walk onward holding faith inside, Weigh each day with thoughtful stride. Make practice and effort your very breath, And let success spread wide each day ahead. — Madurai Babaraj

கருத்துகள்