படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தி.க. சண்முகம் பெரியார் கடவுள் இல்லையென்று சாதாரணமாக சொல்லவில்லை...? மனிதன் ஓர் மனிதரை தொடக் கூடாது. கண்ணில் படக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது. கோவிலுக்குப் போகக் கூடாது. குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறது போல கொள்கை தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகள் ஆக்காமலோ விட்டிருப்பதை பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், அவர் சர்வதயாபதர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

கருத்துகள்