கண்ணகி நகரில் வலவனில்லா வானூர்திப் பயிற்சி*
இன்றைய நவீன உலகத்தில் வலவனில்லா வானூர்தி எனப்படும் drone-களின் சேவை காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை, விவசாயத் துறை என்று பல்வேறு துறைகளில் அவசியமாகிப்போய்விட்டது. இதைக் கருத்தில்கொண்டு முனைவர் இறையன்பு அவர்களின் வழிகாட்டலில் கண்ணகி நகரில் இயங்கிவரும் முதல் தலைமுறை கற்றல் மையம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது இளைர்களுக்கு இரண்டு மாத Drone Pilot பயிற்சியை அளித்தது. இதில் 30 ஆண்களும், 20 பெண்களும் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் நிறைவாக இன்று காலை நடைபெற்ற விழாவில் பயிற்சியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருபது நபர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்களின் பணி ஆணையும் வழங்கப்பட்டது.
முனைவர் இறையன்பு அவர்கள் சான்றிதழ்களையும், பணி ஆணைகளையும் வழங்கினார். முதல் தலைமுறை கற்றல் மையத்தின் நிறுவனர் திரு மாரிசாமி முன்னிலை வகித்தார். கண்ணகி நகரின் உதவி காவல் ஆய்வாளர் திரு அவர்களும், இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் ராஜாவும் கலந்துகொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக