"கண்ணகி நகர்வாழ் இளைஞர்களுக்கான இலவச கோடைக்காலப் பயிற்சி முகாமின் தொடக்க விழாவும், ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்கு உரிமம் வழங்கலும்"`
"கண்ணகி நகர்வாழ் இளைஞர்களுக்கான இலவச கோடைக்காலப் பயிற்சி முகாமின் தொடக்க விழாவும், ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்கு உரிமம் வழங்கலும்"`
கண்ணகிநகர்வாழ் மாணவர்கள் கோடைகாலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கவும், பாரம்பரியக் கலைகளில் ஈடுபாட்டை வளர்த்துக்கொள்ளவும் துடும்பாட்டம், தேவராட்டம், பறையாட்டம், நிகழ்த்துக் கலை, ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்காக முதல் தலைமுறை கற்றல் மையம் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மித்ரா அமைப்புடன் இணைந்து நடத்தவிருக்கும் பத்து நாள் இலவசப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கப்பட்டது.
முகாமைக் கற்றல் மையத்தின் வழிகாட்டி முனைவர் இறையன்பு அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
‘
இதே வகையில் கண்ணகி நகர்வாழ் பெண்கள் சுயச்சார்பு பெற வேண்டும் என்ற நோக்கில் முதல் தலைமுறை கற்றல் மையத்தில் இருபது பெண்களுக்கு ஃபோர்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆட்டோ, கார் ஆகியவற்றிற்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்த நிலையில் இன்று அவர்களுக்கான, ஓட்டுநர் உரிமத்தையும், இலவசச் சீருடையையும் முனைவர் இறையன்பு அவர்கள் வழங்கினார்கள்.
இரு நிகழ்வுகளிலும் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த திரு. சரவணன், திரு. சுரேந்தர், திரு. சாய்சேஷன், இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜோசப் ராஜா, பேராசிரியர் திரு. நடராஜன், கண்ணகி நகர் காவல் உதவி ஆய்வாளர் திரு. குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கற்றல் மையத்தின் நிறுவனர் திரு. மாரிசாமி முன்னிலை வகித்தார்.



கருத்துகள்
கருத்துரையிடுக