படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

மதுரையும் மகாவீரரும் 🤍 மதுரை மாவட்டத்தில் உள்ள மலைக் குன்றங்களில் சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் நிறையவே கிடைத்துள்ளன. இவர்கள் வாழ்ந்த இடங்களில் பெரும்பாலும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதனருகிலேயே அதனை அமைத்தவர்களின் பெயர்களும் வட்டெழுத்தில் இடம்பெற்றிருக்கும். இவைகளில் சில இடங்களில் உள்ள சிற்பங்களின் மீது, மூலிகை ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள கீழக்குயில்குடி சமணர் மலையில், மதுரை மாவட்டத்திலேயே அதிகளவில் சமணர் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு மலைமேல் உள்ள பேச்சிப்பள்ளம், மலை அடிவார ஐயனார் கோயில், அதன் வலது பக்கம் சென்றால் செட்டிப்புடவு ஆகிய இடங்களில் தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் கி.பி. 9 ம் நூற்றாண்டிற்கு பிந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகும். மதுரையில் கிடைத்துள்ள தீர்த்தங்கரர் சிற்பங்களில், மகாவீரரின் சிற்பங்களே அதிகமாக உள்ளது. நன்றி 🙏 இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று ஆர்வலர் சி. அபிஷேக்

கருத்துகள்