படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." நிறுவனங்களைப் பொறுத்தவரை பணிநீக்கம் தான் உச்சபட்ச தண்டனை. அதுவும் இரண்டு வகைப்படும். ஒன்று டிஸ்மிஸ்ஸல், இன்னொன்று டிஸ்சார்ஜ். டிஸ்சார்ஜ் என்று சொன்னால் அவர்கள் வேறு இடத்தில் வேலை தேடிக்கொள்ள முடியும். டிஸ்மிஸ்ஸல் என்று சொன்னால் அவர்கள் எங்கும் வேலை செய்ய முடியாது. பணி நீக்கம் செய்வது உச்சபட்ச தண்டனை மட்டுமல்ல, ஒருவர் பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் போன்றவற்றையும் அத் தண்டனையால் இழந்துவிடுவார்கள். எனவே தவிர்க்க முடியாத நிகழ்வுகளில்தான் இந்தத் தண்டனையை வழங்க வேண்டும். சிலரால் எந்தப் பயனும் இல்லை, நிறுவனமே அவர்களால் நாற்றம் எடுக்கிறது என்கிற நிலை வருகிற போதும் ஊழல் செய்தவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்கிறபோதும், எந்தப் பணியும் செய்யாமல் வெறுமனே காலத்தைக் கழிக்கிறார்கள் என்கிறபோதும் ஒருவரைப் பணியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகப் பணி நீக்கம் செய்யக்கூடாது. நம்மை ஒருவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார் என்பதற்காகவும் இதைச் செய்யக்கூடாது. ஒழுங்கீனமானவர்கள் இது போன்ற நிலை நமக்கு ஏற்படக் கூடும் என்கிற அச்சம் தோன்ற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இதைப் பயன்படுத்தித்தான் தீர வேண்டும். பயன்படுத்தப்படாத அதிகாரங்கள் பயனற்றவையாகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 521. இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்