இனிய காலை வணக்கம் ."
சிலர் தண்டனை தருகிற மனப்பான்மையைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் பணி செய்யும் இடங்களிலெல்லாம் ஏகப்பட்டவர்களுக்குக் குற்றச்சாட்டு குறிப்பாணையை ஏற்படுத்துவார்கள். எல்லோருக்கும் ஏதேனும் ஒரு தண்டனை தருவார்கள். இப்படிப்பட்டவர்களைக் கண்டு நிறுவனமே நடுங்கும். ஆனால் இது ஆரோக்கியமான மனப்பான்மை அல்ல. ஓரளவிற்கு மேல் தண்டனைகளும் மனிதர்களை மரத்துப்போகச் செய்துவிடும். மேலும் நல்ல பணியாளர்கள் இதனால் விரக்தியடைந்து பணிசெய்யாமல் இருப்பார்கள்.
சிலர் பணியாளர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக யாரையும் தண்டிக்காமல் இருப்பார்கள். யார் எப்போது வந்தாலும் கண்டு கொள்ளாமல் பணி செய்கிற அதிகாரிகள் அந்த நிறுவனத்தையே சீர்குலைத்து விடுவார்கள். எனவே இரண்டு மனப்பான்மைகளுமே ஆபத்தானவை. வேலையும் வாங்க வேண்டும், அதே நேரத்தில் பணியாளர்களையும் குறைந்தபட்ச மன அழுத்தத்தோடு வைத்திருக்க வேண்டும்.
தரப்படுகிற தண்டனை விரைவாகத் தரப்பட வேண்டும். இல்லாவிட்டால் தவறு செய்தவர்கள் குளிர்விட்டுப் போய்விடுவார்கள். நாம் குற்றக்குறிப்பாணையை ஏற்படுத்தும்போது விரைவாக முடிவெடுக்கத்தான் என்ற எண்ணம் ஏற்பட்டால் அதை வழங்கிய உடனேயே பல பணியாளர்கள் தங்களைத் திருத்திக்கொள்வார்கள். ஒரு குற்றக்குறிப்பாணையை ஏற்படுத்தித் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரூரமான சிந்தனை சிலருக்கு உண்டு. ஆனால் அது ஆரோக்கியமானதல்ல."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 524.
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக