படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்தநாள்! (27.04.1945--21.12.2018) " மனுதர்மம் என்று சொல்லப்படும் அதர்மங்களை நாடு அறியும். இருந்தாலும், இந்த தலைமுறைஇளைஞர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, மனுவின் சில சட்டங்களை கீழே தருகிறேன். 1. பிராமணன் கூலி கொடுத்தோ கொடாமலோ, சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில், பிராமணனுக்கு தொண்டு செய்யவே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட்டு இருக்கிறான். 2. சூத்திரன் தேடி வைத்துள்ள செல்வத்தை பிராமணன் தடையின்றி கைப்பற்றிக் கொள்ளலாம். அடிமையாகிய சூத்திரனுக்கு எள்ளளவு செல்வமும் உரிமையும் இல்லை. 3. பிராமணனை காப்பாற்றும் பொருட்டு பொய் சொல்லலாம். அவனுக்காக ஒரு பிராமணன் அல்லாதவனை கொன்றாலும் குற்றமில்லை. 4. பிராமணனை சூத்திரன் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணனின் சாதி பெயரைச் சொல்லி திட்டும் வாயில் காய்ச்சிய இரும்பு கம்பியை செருக வேண்டும். 5. சூத்திரன்,மேல் சாதியாரை அடித்தால், அவன் கையையும் காலையும் வெட்டி விட வேண்டும். 6. சூத்திரன், மற்றவர்ணதருடைய மனைவியை புணர்ந்தால் அவனை உயிர் போகும் வரை தண்டிக்க வேண்டும். 7. பிராமணன்,எவ்வளவு பெரிய குற்றத்தை செய்தாலும் அவனை தூக்கிலிடக் கூடாது. அவனது தலையை மொட்டை அடித்தல் வேண்டும் அதுவே, தூக்குத் தண்டனைக்கு சமம். 8. பிராமணனுக்கு தவம்: வேதம் ஓதுதல். சத்திரியனுக்கு தவம்: மனு நூலில் சொல்லியதை அமல்படுத்துதல். வைசியனுக்கு தவம்:வியாபாரம். சூத்திரனுக்கு தவம்: பிராமணனுக்கு பணிவிடை செய்தல். ..‌மனுவின் இந்த சட்டங்களால் தான் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட என் பாட்டன், முப்பாட்டன் படிக்கவில்லை. அவனுக்கென்று அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் இல்லை... --பிரபஞ்சன். -வீ.வெள்ளிங்கிரி.

கருத்துகள்