படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

29/04 இராம அரங்கண்ணல் நினைவு நாள் தஞ்சாவூர் மாவட்டம் கோமல் இவரது பிறந்த ஊர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகாலங்களில்.அண்ணாவின் நிழல் என்றுஅழைக்கப்பட்டவர்.சிறந்தபத்திரிக்கையாளர் சிறந்ததிரைப்படத் தயாரிப்பாளர் திருவாரூரிலும், திருத்துறைப்பூண்டியிலும் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1956-இல் இவருக்கு திருமணம் நடைபெற்றது. பதினெட்டாவது வயதில் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ ஏடான முஸ்லிம் இதழில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். 1949 முதல் திராவிடநாடு இதழில் பணியாற்றினார். பின் ”அறப்போர்” என்ற இதழை 1961 மார்ச் 10ஆம் நாள் தொடங்கி நடத்தினார். 1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து, அண்ணாதுரை வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அவரை ஆதரித்த முக்கிய தலைவர்களுள் அரங்கண்ணலும் ஒருவர். 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1970ஆம் ஆண்டு குடிசைப்பகுதி மாற்றுவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழகசட்டமன்ற.உறுப்பினராக 1),1962-1967:(மயிலாப்பூர்)- 2)1971'(எழும்பூர்)சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றவர் 1971ல்குடிசைமாற்றுவாரியத்தலைவராக பதவியேற்று சென்னை மாநகரில் குடிசைப்பகுதிகள் அனைத்தும்.மாடிவீடுகளாகமாற்றியவர்.கலைஞரின் அவர்களின் பள்ளி தோழராக இருந்தவர் கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் தனதுபள்ளிதோழர் அன்றைய ரெங்கசாமிதான் இன்றைய. அரங்கண்ணல் என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாவிடம் நெருக்கமானவர். கலைஞரின் பால்யநண்பர் என்றதகுதிகளுடன் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவர் என்ற போதிலும் இவருக்கு. தமிழகஅமைச்சரவையில் 1967-1971ல்-இடம்கொடுக்காதது யாதவர்களுக்கு மிகுந்த மனவருத்தையே கொடுத்தது என்றால் மிகையில்லை. 1976 இல் திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைக்கப்பட்டபொழுது இவரும் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1984இல் மீண்டும் திமுகவில் சேர்ந்தார். 2007-08 ஆம் ஆண்டு இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது. கலைமாமணி விருது வழங்கியும் சிறப்பித்துள்ளது திரையுலக வாழ்க்கை திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த மயிலாப்பூர் சன்னதித் தெருவுக்கு நேராக உள்ள நடுத்தெருவில் உள்ள இராம. அரங்கன்னல் வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டில்தான் அவள் ஒரு தொடர்கதை படம் எடுக்கப்பட்டது. நடிகர் ஜெய்கணேஷ் நடித்து பாடிய "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" என்ற பாடல் தெருவிலிருந்து பாடும்பொழுது வீட்டிலிருந்து நடிகை சுஜாதா ஜன்னல் திரைச்சீலைகளை மூடும் காட்சி இங்குதான் அப்போது படமாக்கப்பட்டது. சுஜாதாவின் குடும்பம் அரங்கன்னல் வாழ்ந்த வீட்டில்தான் வாழ்ந்ததாக 1974ல் திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் இவருக்கு முதன் முதலாக ஒரு திரைப்படத்துக்குக் கதை, வசனம் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த “செந்தாமரை”. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவியால் தான் அவ்வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. இவர் வசனத்தில் முதன்முதலாக வெளிவந்த படம் “தாய் மகளுக்குக் கட்டிய தாலி”. நடிகை பத்மினியின் உறவினர் தயாரித்த “பொன் விளையும் பூமி” படத்திற்கு இவர்தான் வசனம் எழுதினார். 1960-இல் வெளியான “பச்சை விளக்கு” படம் தான் இவரது முதல் சொந்தப் படம். இப்படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியாரின் உதவியுடன் தயாரித்தார். இப்படம் வெளியான நேரத்தில் தான் மைலாப்பூர் சட்டமன்ற வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆனாலும் படத்தயாரிப்பையும் விடாது தொடர்ந்தார். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து “அனுபவி ராஜா அனுபவி” படத்தைத் தயாரித்தார். பாலசந்தரே வசனம் எழுதி இயக்கினார். இதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு தோன்றியதால் அவரையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு “தாமரை நெஞ்சம்”, “பூவா தலையா”, “நவக்கிரஹம்”, “அவள் ஒரு தொடர் கதை” படங்களைத் தமிழில் தயாரித்தார். தெலுங்கில் ஏவி.எம்.செட்டியாரின் உதவியுடன் “பொம்மா புருஷா” [தமிழில் பூவா தலையா”] படத்தைத் தயாரித்து வெளியிட்டார். கே.பாலசந்தர் இயக்கிய இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் அடிப்படையில் “அவள் ஒரு தொடர் கதை” படத்தை “அந்துலேனி கதா” என்று தெலுங்கில் தயாரித்து வெளியிட்டார். அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி ஏற்பட்டது. அரசின் ஊடுருவல்கள் திரைத்துறையில் மிகுந்தது. ஆகவே தமிழில் படம் தயாரிப்பதை விட்டுவிட்டார். அந்த வீட்டில்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்தார். விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அங்கு வருவார். இவர்களோடு அரங்கன்னல் பேசுவதை விரும்புவார் இன்று அவரது நினைவு தினம் என்றும் அவரது புகழ் நிலைத்திருக்கும்

கருத்துகள்