இனிய காலை வணக்கம் ."
தென்னிந்தியாவில் முத்துக்குளிப்பதைப் பற்றிச் சீன ஆசிரியர் வாங்டா யுவான் என்பவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு படகிலும் ஐந்து ஆண்கள் இருப்பார்கள். இருவர் துடுப்பை வலிப்பதற்காக, இருவர் கயிற்றைப் பிடிப்பதற்காக. ஐந்தாவது மனிதர் ஆயுள் பயத்தோடு ஒரு மூங்கில் வளையம் வழியாகக் கயிறால் கட்டிக்கொண்டு ஒரு கல்லோடு ஆழத்திற்குச் செல்வான். பிறகு அவன் முத்துச்சிப்பிகளைப் பொறுக்கித் தன் பையில் போடுவான். படகு நிறையும்வரை முத்து சேகரிப்புத் தொடரும் என்றெல்லாம் அவர் தெரிவித்திருக்கிறார்.
பணம் என்பது உழைப்பின் சேமிப்பு. ஒருவர் நிறைய உழைத்து குறுகிய காலத்தில் தன்னுடைய உழைப்பைப் பணமாக மாற்றிக்கொள்கிறார். அந்த உழைப்பை அந்தச் சேமிப்பிற்கு வேறொருவர் பங்கு வகையில் அந்தச் சேமிப்பிற்கு வேறொருவர் தாராளமாக வேண்டுமென்றால் அந்த முன்கூட்டிய உழைப்பிற்கான ஒரு விலையைத் தர வேண்டும். பணம் என்பது முதலீடுகளுக்குப் பயன்படுகிற ஒரு பொருள். எனவே வேறொருவர் பணத்தை வாங்குகிற போது கட்டாயம் அதற்கான ஒரு தொகையைத் தந்து ஈடு செய்யவேண்டும் என்பது மரபு. அதுவே வட்டி.
பணம் கொடுப்பதும், அதற்கு வட்டி வசூலிப்பதும் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்தது என்பதைப் பழங்கால நூல்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 529..
இந்த நாள் மகிழ்ச்சியாய் அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக