படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." மனிதவள மேம்பாட்டில் மிகவும் முக்கியமானது பதவி உயர்வு. ஒரே பணியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு அலுப்பும், சலிப்புமே ஏற்படுகின்றன. விரக்தியடையும் போது அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேறு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. இவ்வளவு நாள் ஒரு நிறுவனம் அளித்த அனுபவம் வேறொரு நிறுவனத்திற்கு வளம் சேர்த்துவிடும். அதுமட்டுமல்லாமல் பதவி உயர்வு என்பது தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ள உதவும் வழிமுறை. படிப்படியாக அனுபவத்தை விருத்தி செய்யும்போது உயர்ந்த பொறுப்புகளை எளிதில் நிர்வகிக்க முடியும்." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 494 இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்