படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கிளாடிஸ் கல்பனா அடிப்படை அரசியல் ஞானமும் இல்லாமல், அரசியல் சக்கரம் எப்படி இயங்குகிறது என்ற அறிவும் இல்லாமல், 70 ஆண்டு காலமாக திராவிடம் என்ன செய்தது என்பதை யோசிக்காமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றிய அடிப்படை புரிதலும் இல்லாமல் தைய தக்க என குதிக்கிறாங்க. மாற்றம் வேணும்னு சொல்றாங்க என்ன மாற்றம் வேணும்னும் தெளிவா தெரிய மாட்டேங்குது. Tired of explaining tharkuris. ஒரு கட்டத்தில் தயவு செய்து நீங்க விஜய்க்கே ஓட்டு போட்டு தொலைங்கன்னு சொல்லிட்டு வர வேண்டியதா போகுது. #VoteResponsibly #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வளரட்டும் #myvoteisforDMK மாற்று அரசியல் வேணும்னு சொல்றதுக்கு முன்ன எதுல மாற்றம் வேணும்னு சொல்லுங்க விவாதிப்போம்! இடுப்பில் இருந்த துண்டு தோளுக்கு வந்தது — மாற்றம் செருப்பில்லாத கால்கள் செருப்பு அணிந்தது — மாற்றம் கைநாட்டு கையெழுத்தாக மாறியது — மாற்றம் படிக்க முடியாதவன் பள்ளிக்குச் சென்றது — மாற்றம் பள்ளிக்குச் சென்றவன் உயர்கல்வி அடைந்தது — மாற்றம் குலக்கல்வி உடைக்கப்பட்டு “நான் விரும்பும் பட்டப்படிப்பு” படிக்க வாய்ப்பு கிடைத்தது — மாற்றம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரி கதவுகள் திறந்தது — மாற்றம் பசியுடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் உறுதி செய்தது — மாற்றம் பெண்கள் கல்வி நின்றுவிடாமல் இருக்க புதுமைப்பெண் திட்டம் துணைநின்றது — மாற்றம் வேலைவாய்ப்பு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது — மாற்றம் அந்த சுய உதவி குழுக்கள் மூலம் எளிய வங்கி கடன் வசதிகள் கிடைத்தது — மாற்றம் வீட்டின் சுமையில் முடங்கிய பெண்கள் இலவச பேருந்து பயணம் மூலம் வேலை, கல்வி, சுயநிறைவு அடைந்தது — மாற்றம் பணம் இல்லாமல் சிகிச்சை கிடைக்காத நிலைமையில் இருந்தவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் உயிர் காக்கப்பட்டது — மாற்றம் கொடிமரத்திலிருந்து தள்ளி நின்றவர்கள் கோயிலுக்குள் நுழைந்தது — மாற்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை கிடைத்தது — மாற்றம் “அரசு அலுவலகம் = காத்திருப்பு” என்ற நிலைமையில் இருந்து ஆன்லைன் சேவைகள் மூலம் எளிதாக சேவை கிடைத்தது — மாற்றம் மூலதன முதலீடுகள், தொழில் வளர்ச்சி மூலம் வேலை வாய்ப்புகள் உருவானது — மாற்றம் சமூக நீதி, சமத்துவம், உரிமை என்ற அடித்தளத்தில் அனைவரும் முன்னேற வாய்ப்பு பெற்றது — மாற்றம் “மாற்றம்” என்பது சமூக முன்னேற்றத்தின் பயணம். நம்மை பின்னோக்கி இழுக்கும் மாற்றம் வேண்டாம்… முன்னேற்றத்தை தொடரும் மாற்றம் வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளும் அந்த முன்னேற்றப் பாதை தொடரட்டும் 🙏 #VoteForDMKAlliance #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

கருத்துகள்