படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

உரைகல்லின் - விழுதுகள் *************************************** ஏப்ரல் -2 ======== உலக சிறுவர் புத்தக தினம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ *** உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. *** குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ பிறந்த தினம் ஏப்ரல் 2 - 1805 நினைவு தினம் ஆகஸ்ட் 4 - 1875 பிறப்பிடமும்-கல்வியும் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஆன்சு கிறித்தியன் ஆண்டர்சென் டென்மார்க்ல் உள்ள ஓடென்ஸ் என்னும் சிறிய நகரில் 1805ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி பிறந்தார். ஆன்சு கிறித்தியன் என்பன டேனிய மரபுவழிப் பெயர்கள் . வறுமையான குடும்பச் சூழலில் இருந்த இவர் டேனிஷ் அரசின் உதவியால் கல்வி கற்க கற்றார். ஆண்டர்சென் சிறுவயதியே புத்திசாலியாகவும், நல்ல கற்பனை வளம் மிக்கவராகவும், நிறைய புத்தகம் படிப்பவராகவும் இருந்தார்.இவர் சிறுவயதில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மிகவும் விரும்பிப் படித்தார். பணியும்-எழுத்துப்பணியும் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இளம் வயதிலேயே இவர் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். தொடக்கத்தில் ஒரு நெசவாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் ஒரு தையல்காரரிடம் சேர்ந்து வேலை பழகினார். 14 ஆவது வயதில் நடிகராகும் எண்ணத்துடன் கோப்பன் கேகனுக்குச் சென்றார். இவரது சிறந்த குரல் வளத்துக்காக அரச டேனிய நாடகக் குழுவில் இவரைச் சேர்ந்த்துக் கொண்டனர். இவரது குரல் விரைவிலேயே மாற்றம் அடைந்தது. இவருடன் நாடகக் குழுவில் இருந்த ஒருவர் ஆன்சை ஒரு கவிஞராகக் கருதுவதாகக் கூறினார்.அன்று முதல் இவர் கதைகள் எழுத ஆரம்பித்தார்.ஆன்டர்சன் 1822 ல் தனது முதல் கதையை வெளியிட்டிருந்தார். சிறுகதையும்-நாவலும் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 1829 ஆம் ஆண்டு இவர் முதல் நாடகமான ‘A Farce’ மற்றும் முதல் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். A Journey on Foot from Holmen's Canal to the East Point of Amager’ என்னும் சிறுகதையின் மூலம் 1829 ஆம் ஆண்டு ஆண்டர்சென் மிகப்பெரும் வெற்றியை அடைந்தார். 1833-ல் டானிஷ் அரசவையிலிருந்து கிடைத்த மானியத்தின் உதவியால் பயணங்களை மேற்கொண்டார்.இவர் பயணங்களின் போது புகழ்பெற்ற 'Agnete and the Merman'-யும், 'The Improvisatore'-யும் நாவலாக எழுதிமுடித்தார். புகழ்ப்பெற்ற கதைகள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 1835 ஆம் ஆண்டு இவர் தேவதைக் கதைகள்’ ['Fairy Tales] வெளியிட்டார்..இந்த கதை இவரின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இவரின் குறிப்பிடத்தக்கப் படைப்பாகப் போற்றப்படும் 'The Ugly Ducking' என்னும் சிறுவர் கதையை 1837-ல் வெளியிட்டார். இவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆண்டர்சென் எழுதிய, திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் மிகப் புகழ்பெற்ற படைப்புகளின் பட்டியல் மிக நீளமானது. இவரின் 'The Ugly Duckling', 'The Snow Queen', 'Thumbelina', 'The Emperors New Clothes', 'The Princess and the Pea' and 'The Little Mermaid' போன்றவை காலத்தினால் அழிக்க முடியாத படைப்புகளாக இலக்கிய உலகில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றன. குழந்தைகளுக்கான கதைகள் கவிதைகள் எழுதுவதில் மிகவும் வல்லவராக திகழ்ந்தார்.இவரது கதை புத்தகங்கள் 125 மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. டேனிஷ் அரசு செய்யத சிறப்பு ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ டேனிஷ் அரசு இவரை ஒரு தேசிய பொக்கிஷமாகக் கருதி இவருக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை அளித்துவந்தது. இவரின் சிலை எழுப்புதல் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இவர் இறப்பதற்கு முன்பே இவருக்கு ஒரு நினைவுச்சிலை எழுப்பும் பணிகள் ஆகஸ்ட் சேபி என்னும் சிற்பியால் செய்யப்பட்டது. மறைவு ^^^^^^^^^ ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் 1875 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தமது 70 ஆம் அகவையில் மறைந்தார். நினைவஞ்சலி ^^^^^^^^^^^^^^^^ கோபனாவனில் உள்ள ஒரு கல்லறைத்தோட்டத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். இவரின் இறுதி நாட்களில் இவர் உலகலாவியப்புகழினை ஏய்தியிருந்தார். இவரின் புகழ் ஆரம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ **ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் கதைகளைத் தழுவி பெருமளவில் கார்ட்டூன்கள் தயாரிக்கப்பட்டன. இவ்வகையான கார்ட்டூன்கள் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. **இவரின் பிறப்பின் 200ஆம் ஆண்டு நினைவாக 2005ஆம் ஆண்டினை ஆன்டர்சன் ஆண்டு என டென்மார்க் அரசு சிறப்பித்தது. **13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இவரின் வாழ்வையும் படைப்புகளையும் புகழும் வண்ணம் ஒரு பூங்கா சாங்காயில் 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. **ஜப்பானின் ஃபுனாபாசி நகரிலும் இவரின் பெயரால் ஒரு சிறுவர் பூங்கா உள்ளது. **அமெரிக்காவில், நியூயார்க் உட்பட பல நகரங்களில் இவருக்கு சிலைகள் உள்ளன. அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தில் அரிய புத்தகம் மற்றும் சிறப்பு தொகுப்புகள் பிரிவில் (Rare Book and Special Collections Division) இவரின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுள்ளது. **1952இல் இவரின் வாழ்வை தழுவிய கற்பனைத் திரைப்படம் இவரின் பெயராலேயே வெளியிடப்பட்டது. Hans Christian Andersen: My Life as a Fairytale என்னும் பெயரில் இவரின் வாழ்க்கைவரலாற்றுப்படம் 2003இல் வெளியானது. **வால்ட் டிஸ்னி தொலைக்காட்சித் தொடர்களில் இவர் சிறு கற்பனைக் கதை மாந்தராக இடப்பெற்றுள்ளார். **சிறுவர் இலக்கியத்திற்கு வலுசேர்க்கும் படைப்புகளை இயற்றிய ஆண்டர்சென்னை சிறப்பு செய்யும் விதமாக கோப்பென்ஹாகன் துறைமுகப் பகுதியில் இவருடைய சிலையை நிறுவியுள்ளது டென்மார்க் அரசு. **இவரின் பிறந்தநாள் "உலக சிறுவர் நூல்கள் தினம்” எனக் கொண்டாடுகிறது. விருதுகள் ^^^^^^^^^^^ சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புத்தங்கள் எழுதுவதில் சிறந்து விளங்குபவர்களுக்கு, அச்சடிக்கும் பதிப்பகங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை "எச்.சி.ஆண்டர்சன் விருது´, ஐ.பி.பி.ஒய்., அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. தொகுப்பு முருகுவள்ளி

கருத்துகள்