இனிய காலை வணக்கம் ."
எல்லோரும் பதவிக்காகப் பணியாற்றுபவர்கள் அல்லர். எனக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி தனியாருக்குச் சொந்தமானது. அங்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்குப் பதவி உயர்வு கிடைத்தது.
தலைமையாசிரியரான அவர், அவருக்குப் பின்பு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்தினார். திருப்தியாக அமையவில்லை. அவர் ‘நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் பணியிலேயே தொடர்கிறேன்’. வேறு யாராவது தலைமை ஆசிரியர் பணியை ஏற்றுக் கொள்ளட்டும் என்று விலகினார். அவரை நேரில் சந்தித்தபோது நான் வியந்தேன்."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 499.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக