இனிய காலை வணக்கம் ."
பயிற்சி என்பது பண்படுத்த வேண்டும், புண்படுத்துவதற்கான களமல்ல. நிபுணத்துவம்
பெறுபவர்கள், எளிமையாக இருந்தாலும் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள். செங்கோலால் செய்யும் அதிகாரத்தைக் காட்டிலும், நிபுணத்துவத்தால் பெறுகின்ற அதிகாரம் உயர்ந்தது என்பதை 'நன்னெறி' சுட்டிக்காட்டுகிறது.
‘பொன் அணியும் வேந்தர் புனையாப்
பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றுஒவ்வார்
மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது
புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்’ (40)
என்கிற அந்தப் பாடலில் பொன் ஆபரணம் அணிந்து கொள்ளும் மன்னன், ஆபரணம் எதுவும் அணியாத அறிஞர்க்கு ஒப்பாகமாட்டார். ஒளிதரும் பொன் அணிகளைத் தரிக்கும் பிற உறுப்புகள், அணிகளைத் தரியாத விழிக்கு ஒப்பாகுமா என்ற வினா எழுப்பப் படுகிறது.
கற்பதைக் களத்தில் செயல்படுத்தாதபோது, கல்வி முற்றுப்பெறாது என்பதை உணர்த்தவே கற்கக் கசடற என்ற திருக்குறளை வள்ளுவர் ‘கல்வி’ அதிகாரத்தில் முதன்மைப் படுத்தினார். பயிற்சிக்கு அது முற்றிலும் பொருந்தும்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 492.
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக