படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." திருக்குறளில் ஆக்கப்பூர்வமான ஒழுங்குமுறை வலியுறுத்தப்படுகிறது. ஒருவனுடைய குற்றம் எத்தகையது என்பதை ஆராய்ந்து அந்தக் குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் என்பது வலியுறுத்தப்படுகிறது. தண்டனையின் நோக்கம் மீண்டும் அக்குற்றம் நிகழாமல் இருப்பதுதானே தவிர தன்னுடைய கோபத்தைத் தனி மனிதன் மீது தீர்த்துக் கொள்வதற்காக அல்ல. 'தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து' (561) கடுமையாகக் கண்டிக்கவேண்டும். ஆனால் தண்டனை தருகிறபோது அது மிதமானதாக இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில அதிகாரிகள் தவறு நடக்கும்போது கோபத்தில் குதிப்பார்கள். உடனே குறிப்பாணை அனுப்புவார்கள். அது அலுவலகத்தின் ஒழுக்கத்தையும், நெறியையும் ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர யாரையும் தண்டிப்பதற்கு அல்ல. பிறகு எச்சரிக்கையோடு அந்த நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பார்கள். சில நேரங்களில் குற்றச்சாட்டு நீடிக்கும் வரை ஏற்படுகிற அச்சமே தண்டனையாக இருப்பதும் உண்டு. அதைத்தான் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். 'கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்' (562) முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 515. இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்