படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." களப்பணி செய்வதன் மூலம்தான் உண்மையான சூழலை நாம் உணர முடியும். குளிர்சாதன அறையில் குந்திக்கொண்டு எல்லாம் எனக்குத் தெரியும் என்று இருப்பவர்கள் எந்த முன்னேற்றத்தையும் நிகழ்த்த முடியாது. மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் களப்பணி செய்த காரணத்தால்தான் மக்களின் நாடியை அறிந்து அவர்களுக்கான மகத்தான பணியை ஆற்ற முடிந்தது. அவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் 20 முறை வந்திருக்கிறார். அவை அனைத்துமே பல நாட்கள் தங்கியிருந்த பயணங்கள். எவ்வளவு வயதானாலும் களத்திற்குச் செல்லுகிற போது கற்றுக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்முடைய சிந்தனைகள் எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பதையும் நாம் களத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். முதிர்ந்த நிலையிலிருக்கும் மேலாளர்களும் களத்திற்குச் செல்லுகிற போது என்ன பிரச்சினை என்பதை நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள முடியும். அதற்குப் பிறகு அவற்றைத் தீர்க்க சாதகமான முடிவுகளை எடுக்க முடியும்." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 491. இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்