**கண்ணகி நகர் மாணவர்கள் உபயோகத்திற்கு டிஜிடல் உபகரணங்கள் அன்பளிப்பு**

**கண்ணகி நகர் மாணவர்கள் உபயோகத்திற்கு டிஜிடல் உபகரணங்கள் அன்பளிப்பு** முனைவர் இறையன்பு அவர்களின் வழிகாட்டலில் கண்ணகி நகரில் இயங்கி வரும் முதல் தலைமுறை அறக்கட்டளைக்கு ரோட்டரி கிளப் மித்ரா ஒரு லட்சம் ரூபாய் பெறுமான டிஜிடல் உபகரணங்களையும், எழுதுபொருட்களையும் நேற்று (11-4.2026) காலை வழங்கியது. மேலும் வாழ்வாதாரத்திற்காகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்து கண்ணகி நகர்வாழ் பெண் ஒருவருக்கு பொருட்களை வியாபாரம் செய்ய உதவும் தள்ளுவண்டியும் அள்பளிப்பாக வழங்கப்பட்டது. முதல் தலைமுறை அறக்கட்டளையின் வழிகாட்டி இறையன்பு அவர்களின் முன்னிலையில் ரோட்டரியின் கவர்னர் திரு சரவணன் இவற்றை வழங்கினார். அப்போது ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த திரு சாய்சேஷன், திரு ரவிசங்கர், திரு ரகுராம், திரு கணேஷ் சிவம், திரு சத்யநாராயணன், அறக்கட்டளையின் நிறுவனர் திரு மாரிசாமி, இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்