இனிய காலை வணக்கம் ."
பயிற்சியளிப்பவர்கள் பயிற்சியாளர்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒரு நேர்மையான அதிகாரியின் கீழ்ப் பயிற்சி பெறுகிற இளம் அலுவலர், அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து அவரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தொடக்கக் காலத்திலேயே பெற்றுவிடுகிறார். பயிற்சியளிப்பவர்கள் தங்களைச் செம்மையாக வைத்துக் கொள்வதோடு நிறைய வாசித்தும், தெரிந்துகொண்டும் அனுபவத்தைச் செறிவாக்கிக்கொள்வது அவசியம்.
பயிற்சியளிப்பவர்கள் தொழிலில் விற்பன்னர்களாகவும், வெறும் அறிவுடன் நின்று விடாதவர்களாகவும் இருக்கவேண்டும்.அப்போதுதான் பயிற்சியால் பலன் கிடைக்கும்."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 492.
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்

கருத்துகள்
கருத்துரையிடுக