படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
இனிய காலை வணக்கம் ."
மேலாண்மையில் மிகவும் முக்கியம் நிதி மேலாண்மை. அதைச் சரியாகச் செயல்படுத்துகிற போதுதான் நிறுவனம் தழைக்க முடியும். மனித வளத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பாக நிர்வாகத்தை வழிநடத்திச் செல்வதற்கும் நிதி மேலாண்மை அவசியம்.
நிதி என்பது எப்போதும் குறைவாக இருப்பது. தேவைகளோ அதிகம், ஆதாரங்களோ குறைவு. எனவே கைவசம் வைத்திருக்கும் ஆதாரங்களை திறமையாகப் பல்வேறு நல்ல பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்த வேண்டும். அவற்றை முறையாக ஈட்ட வேண்டும். ஒரு ரூபாய்கூட சிதறாமல் பெற வேண்டும். பிறகு சரியாக வரவு வைக்க வேண்டும். ஆதாயம் தரக்கூடியவற்றில் கச்சிதமாக முதலீடு செய்யவேண்டும். அது விரயமாகாமல் சேமிக்கப்படவேண்டும். இது இன்றிருக்கக்கூடிய எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 526.
இந்த நாள் மகிழ்வான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக