வரலாற்றுத் தருணமிது: வழக்கறிஞரானார் பேரறிவாளன்
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் என்ன செய்கிறார் என பலருக்குத் தெரியாது.
எந்த நீதிமன்றத்தின் படிகளில் தனக்கான நீதிக்காக காவலர்கள் புடைசூழ 31 ஆண்டுகள் ஏறி இறங்கினாரோ அதே சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை - புதுச்செரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார் பேரறிவாளன். சிறைமீண்ட பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகி இருக்கும் அறிவுக்கு பேரன்பும் வாழ்த்துகளும் !
2011 இல் இதே சென்னை உயர் நீதிமன்ற வளாகம். பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான மரண தண்டனை ரத்து என்னும் செய்தியைக் கேட்டபோது கூடியிருந்த அத்தனை பேரும் ஆனந்தக் கண்ணீர் விட்டோம். 15 ஆண்டுகளாயிற்று. இன்றும் அதே சென்னை உயர் நீதிமன்ற வளாகம். அதே ஆனந்தக் கண்ணீர்
நினைத்தது போல சாதித்தாயிற்று அறிவு ❤ . நெகிழ்ச்சியிலும் உணர்ச்சிப் பெருக்கிலும் உள்ளது மனம்.

கருத்துகள்
கருத்துரையிடுக