இனிய காலை வணக்கம் ."
பலரைப் புகழ்ந்தே பதவி உயர்வு பெறுகிறவர்கள் உண்டு. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல அவர்கள் பாலாடை புளிக்கும் வரை உயர்வதுபோல உயர்ந்து அங்கேயே தங்கி விடுவார்கள். தாமதமானாலும் தகுதியே வெற்றி பெறும்.
எந்த முயற்சியும் எடுக்காமல் நமக்குச் சீனியாரிட்டிப்படி பதவி கிடைக்கும், பணி உயர்வு கிடைக்கும் என்றிருப்பவர்களும் பல நிறுவனங்களில் இருக்கிறார்கள். எதையாவது புதுமையாகச் செய்யப்போய் மாட்டிக்கொண்டால் என்னாவது என்கிற அடிப்படையில் இவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத காரணத்தால் இவர்களுக்கும் பணி உயர்வு கிடைப்பதுண்டு. ஆனால் தனியார் நிறுவனங்களில் இது எல்லா நேரமும் சாத்தியமில்லை."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 496.
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக