ஒரு விஷயத்தைக் கவனித்தால் விஜய்க்கு ஏன் மனநல ஆலோசனை தேவை என்பது புரியும். பல்லாண்டுகளாக அப்பாவின் கைப்பிடியில் பிராய்லர் கோழியாகவே வளர்ந்துவிட்டு, திடீரென 50 வயதில் சுதந்திரம் அடைந்ததால் வந்த வினை இது. தலைவா படத்தின்போதுகூட SAC விஜய்யை அறைந்திருக்கிறார் என அவர் மேனேஜரே சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு மனிதனை வெகுவாக பாதித்து "empathy" (சக மனிதன் மீது இரக்கமே) இல்லாத சைக்கோவாக மாற்றக்கூடியது.
விஜய்யின் திடீர் சுதந்திரத்துக்குப் பின், "நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்குறது" என்ற மனநிலை அவருக்கு முத்திப்போய்விட்டது. ரசிகர்கள் அவரிடம் காட்டும் "அதீத வெறி" அவருக்கு ஒரு பெருமிதத்தை, அதிகாரத்தைக் கொடுக்கிறது. அப்பாவின் கையில் இருக்கும்வரை ஹீரோவாக அல்ல, சாதாரண மகனாகக்கூட சுதந்திரம் இல்லாமல் இருந்த அவர் இப்போது God complexஸில் தவிக்கிறார்.
பீஸ்ட் படத்தை ஊரே கழுவி ஊற்றியபோதும் "நீ என்ன அதை நல்லாலேனு சொல்றது. நான் சொல்றேன் அது மிகப்பெரிய வெற்றிதான்" என எப்போதும் இல்லாத பழக்கமாக தன் வீட்டில் விருந்து வைத்தது. 'நடிகனாக இருந்தாலும் நடிகைகளுடன் தொடர்பு வைக்க கூடாது, நடிகைகளைக் காதலிக்கக்கூடாது என்று என் அப்பா என்னைத் தடுத்தாரல்லவா, இப்போது என்னைப் பாருங்கள், முடிந்தால் அந்த ஆள் தடுக்கட்டும்' என நடிகையுடன் சேர்ந்திருப்பது. "ஓ... நான் ஊர் சுற்றுவதும் ஃபோட்டோ போடுவதும் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் மன உளைச்சலாக உள்ளது என வழக்கு போடுவாயா? இப்போது பார் பொதுவில் நாங்கள் டிவின்னிங் செய்கிறோம்" என வேண்டுமென்றே வெளியில் வந்து சுற்றுவது. நான் கரூர் போகவேண்டுமென்றால் சிக்னல் இருக்கக்கூடாது, ஸ்பீட் பிரேக்கர் இருக்க கூடாது, ரோட்டில் ஆளே இருக்க கூடாது என உலகிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மனு கொடுத்தது. அதென்ன எல்லாருக்கும் பிரச்சாரம் பண்ண ஒரு மணி நேரம், எனக்கும் ஒரு மணி நேரமா? எனக்கு எக்ஸ்ட்ரா டைம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து நச்சரிப்பது. இல்லையென்றால் அரசியலில் தனக்கு மட்டுமே எதிராக பெரிய பெரிய சதிகள் நடப்பதாக தொடர்ந்து hallucinate செய்வது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதே வரிசையில்தான் ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்கள் குண்டு வைத்து பலரைக் கொல்வதாகக் காட்டி இருக்கும் சீன்களையும் சேர்க்க வேண்டும். துப்பாக்கி படத்தில் பிரச்சினை பெரிதானபோதே எஸ்.ஏ.சி அதை சமாளித்தார். “இதற்குப் பிராயச்சித்தமாக விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார்” என்று பிரஸ்மீட் கொடுத்தார். ஆனால் வேண்டுமென்றே பீஸ்ட்டிலும் அதையே செய்தார் விஜய். பீஸ்ட் சமயத்தில் தன் தந்தையிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தின்போது இஸ்லாமியர்கள் கோபப்பட்டார்கள். ஆனாலும் இப்போது மீண்டும் ஜனநாயகன் படத்திலும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு ஒரே காரணம் “நீங்க என்ன என்னை சொல்றது? இதோ ஜனநாயகனிலும் அதையே செய்திருக்கிறேன். உங்களால் என்ன செய்ய முடியும்" என்ற அதீத ஈகோவின் வெளிப்பாடே அன்றி வேறல்ல. இல்லைன்றால், சிறுபான்மையினர் வாக்குகளுக்காக இஃப்தார் போகிறோமே, ஜோசஃப் விஜய் என்றெல்லாம் ஏமாற்றுகிறோமே என்று கூட அந்த ஆள் யோசிக்கவில்லை பாருங்கள். எல்லாவற்றையும்விட அவருக்கு ஈகோ பெரிது.
அவரது இந்த மனநிலைக்கு அவர் அப்பா வளர்ப்பு, ஆண்டாண்டுகால சுதந்திரமின்மை மட்டும் காரணமல்ல, அவர் எதை சொன்னாலும் நம்பும் ரசிகர்களும், நம்ம நினைச்சா எதை வேண்டுமானாலும் ஆன்லைன்ல பரப்பலாம் சார்” என அவருக்கு அதீத தைரியம் கொடுக்கும் அவரது அல்லக்கை ஆன்லைன் டீமும்தான். மேலோட்டமாகப் பார்த்தால் கூட விஜய்யிடம் மாற்றுக்கருத்தை முன்வைக்கும் ஆட்களே அவரைச்சுற்றி இப்போது கிடையாது. தலையாட்டும் கூட்டத்தை மட்டுமே வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜுனா போன்ற ஆறடி ஃபிராடுகள் உட்பட.
நீங்களே சிந்தித்துப் பாருங்கள். விஜய்யைத் தவிர உலகத்தில் ஒரே ஒரு அரசியல்வாதியாவது தன் விவாகரத்திற்கு இன்னொரு அரசியல்கட்சிதான் காரணம் என பேசியிருக்கிறார்களா? அல்லது அப்படிப் பேசினால் யாராவது நம்புவார்களா? ஆனால் விஜய் பேசியிருப்பதற்குக் காரணம் அவரது ரசிகர்கள். ஏனெறால் “நீ கல்யாணத்துக்கு ஜோடியா டிரஸ் போட்டு போனதுக்கும் திமுகதான் காரணமா?” என ஒரு ரசிகனாவது கேட்டானா பாருங்கள்! கரூர் சம்பவத்தில் விஜய்யின் ஆன்லைன் டீமும் விஜய்யும் சொன்ன பொய்களை அவர் ரசிகர்கள் நம்பியதுதான் ஆரம்பப்புள்ளி. என்ன சொன்னாலும் நம்புவாய்ங்கடா என்ற திமிரை அந்தச் சம்பவம் அவர் மனதில் ஆழமாகப் பதிவுசெய்து அவரது God Complexஸிற்கு வலு சேர்த்துவிட்டது.
இதோ ஜனநாயகன் படத்தில் ‘For edit' காப்பி லீக் ஆகியிருக்கிறது. இது இயக்குநர், தயாரிப்பு நிறுவனம், எடிட்டர், ஹீரோவிடம் மட்டுமே இருக்கும். சென்சார் காப்பி என்றால் ‘for censor' என்று இருக்கும். அந்த காபி கூட சென்சார் போர்டிடம் இருக்காது. பட நிறுவனம் படத்தைப் போட்டுக் காண்பித்துவிட்டு கையோடு எடுத்து வந்துவிடுவார்கள். அதேபோல subtitle காபி என்றால் ‘for subtitle' என்று இருக்கும். ஆனால் இருப்பவனை எல்லாம் கேணையனாக நினைத்து ஆதவ் அர்ஜுனா என்கிற அருவருப்பான வைரஸ் இந்தப் பழியையும் திமுக மேல் போட்டிருக்கிறது. விட்டால், படம் ஏன் நல்லா இல்லை என்றால்கூட திமுகதான் காரணம் என்று சொன்னாலும் சொல்வார்கள். அதையும் இந்தக் கூட்டம் நம்பும்.
விஜய்யின் மனநிலைக்கு மருத்துவ உதவி தேவை. அவர் குணமானால்தான் அவர் ரசிகர்கள் திருந்துவார்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை. அதற்கு இன்னொரு வழி உண்டு. தேர்தல். தேர்தல் வாக்குகள் என்பது வாய்க்கு வந்தபடி அடித்துவிடும் பாக்ஸ் ஆஃபீஸ் கலக்சன் அல்ல என்பதை மக்கள் அவருக்குப் புரிய வைக்க வேண்டும். ’நீ பெரிய இவன் எல்லாம் இல்லை, நீயும் சாதாரண மனிதன் தான். உன உளவியல் சிக்கல்களை சமூகத்தில் காட்டாதே, ஓரமாகப் போய் உட்கார்” என மக்கள் அவரை ஓரமாக உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் இந்த நோய் தீரும். ஏனெனில் தனிமனிதனுக்கு மனப்பிரச்சினை என்றால் அது அவனுக்கு மட்டும்தான் ஆபத்து. ஒரு கூட்டத்தை வைத்திருப்பவனுக்குப் பிரச்சினை என்றால் அது அந்த கூட்டத்துக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே ஆபத்து.
-டான் அசோக்
ஏப்ரல் 10, 2024

கருத்துகள்
கருத்துரையிடுக