படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." சின்னச் சின்ன பணிகளும் அவையளவில் முக்கியத்துவம் பெற்றவையே. மேலாளராக இருப்பவர்கள் சில பணியாளர்களே முக்கியமானவர்கள் மற்றவர்கள் தேவையில்லை என்று நினைக்கக்கூடாது. எந்தப் பணியாளரும் தான் முக்கியமில்லையோ என்று நினைக்கும்படியான எண்ணத்தையும் ஏற்படுத்தக்கூடாது. அவர்கள் அனைவருமே செய்கிற செயல் நிறுவனத்தைத் தூக்கிப்பிடிக்கிற செயல், அவர்கள் இல்லாமல் செயல்பட முடியாது என்கிற ஆழமான எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமானவர்கள் என்று நினைக்கிறவர்கள், அந்தப் பணியிலிருந்தே திருப்தியைக் காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்கிற செடிகளைப்போல உறிஞ்சிக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்டு சம்பள உயர்வுக்காகப் போராட்டங்கள் நடத்துவதில்லை." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 502. இந்த நாள் மகிழ்வான நாளாக அமையட்டும்.

கருத்துகள்