படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." ஓர் அரசர் தன்னுடைய இசைக் கலைஞனிடம் “எனக்கு எழுபது வயதாகிறது. படிக்க ஆசையாக இருக்கிறது, ஆனால் மிகவும் காலதாமதமாகி விட்டது” என்றார். “நீங்கள் ஏன் ஒரு மெழுகுவத்தியை ஏற்றக் கூடாது?” என்றார் அந்த இசைக்கலைஞன். “மன்னனிடம் கிண்டலா?” அரசர் கோபமுற்றார். “நான் நகைச்சுவை செய்யவில்லை. இளம் வயதில் படிக்கும் ஆசை இருந்தால், அவன் எதிர்காலம் காலைச் சூரியன்போல ஜொலிக்கும். நடுத்தர வயதில் அதைப் பயன்படுத்தினால், அது நண்பகல் போல. வயோதிகத்தில் வாசிப்பது மெழுகுவத்தியின் ஒளியைப்போல. அது பளிச்சென்று இருக்காவிட்டாலும், இருட்டில் தடுமாறுவதை விடப் பரவாயில்லை” என்றார். கற்றுக் கொள்வதற்கு வயது தடையல்ல, பணியனுபவமும் விலக்கல்ல. கற்றுக்கொண்டு அறிவைத் தேக்கி வைத்திருப்பதால் மட்டும் பயனில்லை. அதை எப்படி வர்த்தகமாக்கி வெற்றிபெறுகின்ற உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 490. இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்