ஹைக்கூ கவிதைகள் தினம்..,*
மூன்று வரிகளில் முறையே,
ஐந்து, ஏழு, ஐந்து..., என (17 நேரசை, நிரையசைகளைக் கொண்டு)அமைகிற ஜப்பானின் புகழ் பெற்ற கவிதை வடிவம்தான் ஹைக்கூ.
ஜப்பானின் (ஹைக்கூ தந்தை) பாஷோ எழுதிய ஹைக்கூ கவிதையே, ஜென் தத்துவத்தின் முதல் ஹைக்கூ. எந்த அலங்காரமும் இன்றி இயற்கையை, உள்ளது உள்ளபடி கவிதையில் பாடுவது ஹைக்கூ.
*பழைய குளம்*
*தவளை குதித்தது*
*நீர் ஒலி* என்ற இந்த ஹைக்கூ கவிதை உலகப்புகழ் பெற்ற ஒன்று. இதில் எல்லாமே சொல்லப்பட்டு விட்டது என்பார்கள்.
பழைய குளம் - உலகம்,
தவளை குதித்தது - வாழ்க்கை,
நீர் ஒலி - வாழ்வின் சலனங்கள் அலை அலையாக அலைந்து அடங்குவது.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1867 வரை) சீன ஜப்பானிய மொழிக் கலவையாகத் தோன்றிய இது ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு பின்னர் ஹைக்கை என்று திரிந்து, இப்போதைக்கு ஹைக்கூ என்றாயிற்று.
இக்கவிதை வடிவத்திற்கு தமிழில் குறும்பா, துளிப்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனப்பா, அணில் வரிப்பா என பல பெயர்கள் உண்டு.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி ஹைக்கூ கவிதைகளுக்கு தான் பொருந்தும். ஹைக்கூ என்றவுடன் எனக்கு சுஜாதா சார் தான் நினைவுக்கு வருவார். அவரின் ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் புத்தகம் 64 பக்கங்கள் தான். உயிர்மை பதிப்பகம். முடிந்தால் படித்துப் பாருங்கள்.
முதல் வரியில் ஒரு கதை சொல்லி, பின்பு அதை விவரித்து, கடைசியில் ஒரு திடுக் திருப்பம் கொண்டு வர முடிந்தால் நீங்களும் ஒரு ஹைக்கூ கவிஞர் தான். இதெல்லாம் சுஜாதா சாரின் கைவண்ணம்.
*மாதம் ஒரு முறை*
*கழுத்தில் விழும் சால்வை*
*சலூன் கடையில் நான்*
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக