நூல் திறனாய்வு - திரைச்சுவடுகள் நூலின் தலைப்பு : திரைச்சுவடுகள் நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் வகை : கட்டுரை பக்கங்கள் : 178 வெளியீடு : வானதி பதிப்பகம் நூலின் விலை : ரூ.160 மதிப்புரை : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில் : கவிஞர் இரா.இரவியின் ‘திரைச்சுவடுகள்’ என்னும் நூல் ‘மாயாண்டி குடும்பத்தார்’ முதல் ‘மாற்றான்’ - வரையிலான ஐம்பத்து நான்கு திரை விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரை நூலாக, வானதி பதிப்பகத்தின் வெளியீடாக நம் கரங்களில் கிட்டியுள்ளது. ‘ஓதுவார்க்கு உணவு’ முதல் ‘கன்னிகா தானம்’ வரை இலக்கியம் கூறும் அறங்களின் எண்ணிக்கை 32 வது பகவத் கீதையில் ஞானத்தின் பரிமாணத்தைப் பிரதிபலிக்கும் ஸ்லோக எண் முப்பத்து இரண்டு; சங்க இலக்கியம் பாடிய பெண் பாற்புலவர்களின் எண்ணிக்கை முப்பத்து இரண்டு; சதுரங்க விளையாட்டில் ‘கருப்பு’, ‘வெள்ளை’ – என மொத்த காய்களின் எண்ணிக்கை 32. மதிப்புறு முனைவர் இரா.இரவியின் ‘திரைச் சுவடுகள்’ எனும் நூல் இவரது 32 படைப்பாகும். சக்தி வாய்ந்த எண் என கணித ரீதியாக கருதப்படும் “32” என்ற எண் இந்த முப்பத்திரண்டாவது படைப்பின் வழி இரா.இரவியை எழுத்து ரீதியாக மேம்படச் செய்யும் என எண்ணுகிறேன். பாலுமகேந்திரா முதல் பத்மஸ்ரீவரை: ஒன்றல்ல; இரண்டல்ல; பிரபல கதாநாயகன்-நாயகி, துணைக்கதாப்பாத்திரங்கள். நகைச் சுவை நடிகர்கள் என குறைந்தது நூறு கதாப்பாத்திரங்களைப் பற்றிய விமர்சனம் ‘திரைச்சுவடுகள்’ நூலில் உள்ளடங்கியுள்ளது. ‘அல்டிமேட் ஸ்டார்’ - அஜீத் முதல் ‘அட்டக்கத்தி’ தினேஷ் வரை, 'ஆக்க்ஷன் கிங்' அர்ஜீன் முதல் அதர்வா முரளி வரை, 'இளைய தளபதி’ - விஜய் முதல் மக்கட்செல்வன் - விஜய் சேதுபதி வரை, 'சீயோன்’ – விக்ரம் முதல் உழைப்பால் உச்சம் தொட்ட ‘சிவகார்த்திகேயன்’ வரை, ‘புரட்சித்தமிழன்’ சத்யராஜ் முதல் மாஸ்டர் கிராப்ட்ஸ் மேன் பாலுமகேந்திரா வரை, ‘கும்கி’ புகழ் விக்ரம் பிரபு முதல் காலக்ஸி ஸ்டார் விமல் வரை, ‘மாமன்னன்’ புகழ் உதயநிதி முதல் ‘இந்தியன் புரூஸ்லி’ - தனுஷ் வரை நடிப்பின் நாயகன் - சூர்யா முதல் இயற்கை பட நாயகன் 'ஷாம்' - வரை, உலக நாயகன் கமலஹாசன் முதல் மெகா ஸ்டார் மம்முட்டி வரை, இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல் ‘தென்னிந்தியாவின் மார்லன் பிராண்டோ - மணிவண்ணன் வரை, குணசித்திர நடிகர் தம்பி இராமையா முதல் மு.இராமசுவாமி வரை, காஞ்சிவரம் படப்புகழ் பிரகாஷ்ராஜ் முதல் ‘லீ’ படப்புகழ் சிபிராஜ் வரை, ‘சாட்டை’ புகழ் சமுத்திரக்கனி முதல் ‘சைவம்’ - புகழ் நாசர் பாஷா வரை - என நடிகர்களையும், ‘புன்னகை அரசி' சிநேகா முதல் அனுஷ்கா ஷெட்டி வரை, ‘வாகை சூட வா’ - இனியா முதல் பிக்பாஸ் புகழ் ஓவியா வரை, ‘காக்கா முட்டை’ - புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் காஜல் அகர்வால் வரை, தென்னிந்திய திரைப்படங்களின் இராணி திரிஷா முதல் அழகி, புகழ் நந்திதா தாஸ் வரை - எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் நடிகைகளையும் எனும்படியாக 54. திரைப்பட விமர்சனங்களும் ஆங்காங்கே நடிக, நடிகையர் சாதனைகளைச் சொல்லிச் செல்கின்றன எனலாம். இயக்குநர் அட்லி முதல் அருண் காமராஜ் வரை : கவிஞர் இரா.இரவி எனும் திரைப்பட விமர்சகர் இந்நூலில் இயக்குநர் ராம் முதல் இராஜீ முருகன் வரை, இயக்குநர் பிரபு சாலமன் முதல் வெங்கட் பிரபு வரை, கே.வி.ஆனந்த் முதல் ரமேஷ் அரவிந்த் வரை, மணிகண்டன் முதல் மகிவர்மன் வரை, செல்வராகவன் முதல் மதுரைக்கார இயக்குநர் இராகவன் வரை, இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் பாண்டியராஜ் வரை, இயக்குநர் சமுத்திரகனி முதல் சற்குணம் வரை, இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் மகிழ்திருமேனி வரை. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் முதல் சக்தி சௌந்தர் ராஜன் வரை, அரவான் புகழ் வசந்தபாலன் முதல் ஏழாம் அறிவு முருகதாஸ் வரை, இயக்குநர் விஜய் முதல் 'பரதேசி' புகழ் பாலா வரை, கௌதம் வாசுதேவ் மேனன், முதல் மதுரை மண்ணின் மைந்தன் சீனுராம சாமி வரை, இயக்குநர் ஞானவேல் முதல் 'பெரியார்’ படப்புகழ் ஞானராஜசேகரன் வரை - கிட்டத்தட்ட ஐம்பது இயக்குநர்களின் திரைப்படங்களை மனசாட்சி எனும் “கண்ணாடி" - அணிந்து, நேரடியாக களம் இறங்கி வெள்ளித்திரையில் உடனடி காட்சியாக கண்டு, களித்து, திரைப்படம் பார்த்த அன்றே திரை விமர்சனம் எழுதி அவற்றை 'திரைச்சுவடுகள்-எனும் பெயரில் தமிழ்ச்செம்மல் இரா.இரவி நூலாக வெளியிட்டுள்ளார்.
நூல் திறனாய்வு - திரைச்சுவடுகள்
நூலின் தலைப்பு : திரைச்சுவடுகள்
நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் வகை : கட்டுரை
பக்கங்கள் : 178
வெளியீடு : வானதி பதிப்பகம்
நூலின் விலை : ரூ.160
மதிப்புரை : முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
கவிஞர் இரா.இரவியின் ‘திரைச்சுவடுகள்’ என்னும் நூல் ‘மாயாண்டி
குடும்பத்தார்’ முதல் ‘மாற்றான்’ - வரையிலான ஐம்பத்து நான்கு திரை
விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரை நூலாக, வானதி பதிப்பகத்தின்
வெளியீடாக நம் கரங்களில் கிட்டியுள்ளது. ‘ஓதுவார்க்கு உணவு’ முதல்
‘கன்னிகா தானம்’ வரை இலக்கியம் கூறும் அறங்களின் எண்ணிக்கை 32 வது
பகவத் கீதையில் ஞானத்தின் பரிமாணத்தைப் பிரதிபலிக்கும் ஸ்லோக எண்
முப்பத்து இரண்டு; சங்க இலக்கியம் பாடிய பெண் பாற்புலவர்களின்
எண்ணிக்கை முப்பத்து இரண்டு; சதுரங்க விளையாட்டில் ‘கருப்பு’, ‘வெள்ளை’ –
என மொத்த காய்களின் எண்ணிக்கை 32. மதிப்புறு முனைவர் இரா.இரவியின்
‘திரைச் சுவடுகள்’ எனும் நூல் இவரது 32 படைப்பாகும். சக்தி வாய்ந்த எண்
என கணித ரீதியாக கருதப்படும் “32” என்ற எண் இந்த முப்பத்திரண்டாவது
படைப்பின் வழி இரா.இரவியை எழுத்து ரீதியாக மேம்படச் செய்யும் என
எண்ணுகிறேன்.
பாலுமகேந்திரா முதல் பத்மஸ்ரீவரை:
ஒன்றல்ல; இரண்டல்ல; பிரபல கதாநாயகன்-நாயகி, துணைக்கதாப்பாத்திரங்கள்.
நகைச் சுவை நடிகர்கள் என குறைந்தது நூறு கதாப்பாத்திரங்களைப் பற்றிய
விமர்சனம் ‘திரைச்சுவடுகள்’ நூலில் உள்ளடங்கியுள்ளது. ‘அல்டிமேட் ஸ்டார்’ -
அஜீத் முதல் ‘அட்டக்கத்தி’ தினேஷ் வரை, 'ஆக்க்ஷன் கிங்' அர்ஜீன் முதல்
அதர்வா முரளி வரை, 'இளைய தளபதி’ - விஜய் முதல் மக்கட்செல்வன் -
விஜய் சேதுபதி வரை, 'சீயோன்’ – விக்ரம் முதல் உழைப்பால் உச்சம் தொட்ட
‘சிவகார்த்திகேயன்’ வரை, ‘புரட்சித்தமிழன்’ சத்யராஜ் முதல் மாஸ்டர் கிராப்ட்ஸ்
மேன் பாலுமகேந்திரா வரை, ‘கும்கி’ புகழ் விக்ரம் பிரபு முதல் காலக்ஸி ஸ்டார்
விமல் வரை, ‘மாமன்னன்’ புகழ் உதயநிதி முதல் ‘இந்தியன் புரூஸ்லி’ - தனுஷ்
வரை நடிப்பின் நாயகன் - சூர்யா முதல் இயற்கை பட நாயகன் 'ஷாம்' - வரை,
உலக நாயகன் கமலஹாசன் முதல் மெகா ஸ்டார் மம்முட்டி வரை, இயக்குநர்
இமயம் பாரதிராஜா முதல் ‘தென்னிந்தியாவின் மார்லன் பிராண்டோ -
மணிவண்ணன் வரை, குணசித்திர நடிகர் தம்பி இராமையா முதல்
மு.இராமசுவாமி வரை, காஞ்சிவரம் படப்புகழ் பிரகாஷ்ராஜ் முதல் ‘லீ’ படப்புகழ்
சிபிராஜ் வரை, ‘சாட்டை’ புகழ் சமுத்திரக்கனி முதல் ‘சைவம்’ - புகழ் நாசர்
பாஷா வரை - என நடிகர்களையும், ‘புன்னகை அரசி' சிநேகா முதல் அனுஷ்கா
ஷெட்டி வரை, ‘வாகை சூட வா’ - இனியா முதல் பிக்பாஸ் புகழ் ஓவியா
வரை, ‘காக்கா முட்டை’ - புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் காஜல் அகர்வால்
வரை, தென்னிந்திய திரைப்படங்களின் இராணி திரிஷா முதல் அழகி, புகழ்
நந்திதா தாஸ் வரை - எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்
நடிகைகளையும் எனும்படியாக 54. திரைப்பட விமர்சனங்களும் ஆங்காங்கே
நடிக, நடிகையர் சாதனைகளைச் சொல்லிச் செல்கின்றன எனலாம்.
இயக்குநர் அட்லி முதல் அருண் காமராஜ் வரை :
கவிஞர் இரா.இரவி எனும் திரைப்பட விமர்சகர் இந்நூலில் இயக்குநர் ராம்
முதல் இராஜீ முருகன் வரை, இயக்குநர் பிரபு சாலமன் முதல் வெங்கட் பிரபு
வரை, கே.வி.ஆனந்த் முதல் ரமேஷ் அரவிந்த் வரை, மணிகண்டன் முதல்
மகிவர்மன் வரை, செல்வராகவன் முதல் மதுரைக்கார இயக்குநர் இராகவன்
வரை, இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் பாண்டியராஜ் வரை, இயக்குநர்
சமுத்திரகனி முதல் சற்குணம் வரை, இயக்குநர் மாரி செல்வராஜ் முதல்
மகிழ்திருமேனி வரை. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் முதல் சக்தி சௌந்தர்
ராஜன் வரை, அரவான் புகழ் வசந்தபாலன் முதல் ஏழாம் அறிவு முருகதாஸ்
வரை, இயக்குநர் விஜய் முதல் 'பரதேசி' புகழ் பாலா வரை, கௌதம் வாசுதேவ்
மேனன், முதல் மதுரை மண்ணின் மைந்தன் சீனுராம சாமி வரை, இயக்குநர்
ஞானவேல் முதல் 'பெரியார்’ படப்புகழ் ஞானராஜசேகரன் வரை - கிட்டத்தட்ட
ஐம்பது இயக்குநர்களின் திரைப்படங்களை மனசாட்சி எனும் “கண்ணாடி" -
அணிந்து, நேரடியாக களம் இறங்கி வெள்ளித்திரையில் உடனடி காட்சியாக
கண்டு, களித்து, திரைப்படம் பார்த்த அன்றே திரை விமர்சனம் எழுதி அவற்றை
'திரைச்சுவடுகள்-எனும் பெயரில் தமிழ்ச்செம்மல் இரா.இரவி நூலாக
வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக