படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

Amma Shagasraa ஏன் இந்த அடிமைத்தனம்??? இந்தியாவின் உயர்கல்விச் சராசரி 25% என்றால், தமிழகம் 50% எட்டிப் பிடித்து ‘முன்மாதிரி’ மாநிலமாக நிற்கிறது. நம் தொழிற்துறை வளர்ச்சி இரண்டு இலக்கங்களில் எகிறுகிறது. இவ்வளவு படித்த சமூகம், 'தலைமை' என்று வரும்போது மட்டும் தடுமாறுகிறது??!! கல்வியில் முன்னேற்றம்... சிந்தனையில் வீழ்ச்சி! என்ன ஆயிற்று நமக்கு..??!! இருபது வருட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்பொழுது... "தலைவா தலைமை ஏற்க வா" என்று ஒரு நடிகரின் வீட்டின் முன் கதறிய அதே கூட்டம், இன்று இன்னொரு நடிகரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை வளரும் குழந்தைகள் எந்த நடிகரைத் தூக்கிச் சுமக்கப் போகிறார்களோ? யாரோ எழுதிய கதைக்கு, யாரோ போட்ட தாளத்திற்கு, நடிக்க,ஆடத் தெரிந்த ஒரு உடல் உழைப்புதான் நடிப்பு. சினிமாவில் நடிக்க ‘சிந்தனை’ அவசியமில்லை. ஆனால் அரசில் தவறாக போடும் ஒரு கையெழுத்து பல கோடி பேரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும்... அரசாள்வதற்கு கூர்மையான அறிவும் சீர் தூக்கி பார்க்கும் தெளிவும் வேண்டும்.. தோற்றம் முக்கியமில்லை..?!! மக்களுக்காக ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள், எந்தக் கள அனுபவமும் இல்லாதவர்கள், வெறும் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு 'தலைவன்' ஆகப் பார்ப்பது - அதற்குப் படித்த இளைஞர்களே பலியாவது... திரை பிம்பம் என்பது மாயை என்று தெரியாத கூட்டமா நாம்.. இது உலக அவலம் இல்லையா??? "நான் வந்தவுடன் வறுமையை ஒழிப்பேன்" என்று கத்துபவரா தலைவன்...... வறுமையை ஒழிக்க விவசாயத்தில் என்ன மாற்றத்தைச் செய்வேன், எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று புள்ளிவிவரங்களோடும், திட்டங்களோடும் (Data & Blueprints) பேசுபவர் அல்லவா உண்மையான தலைவன்! தோல்வியிலும் மக்களோடு நிற்பவர், அதிகாரம் இல்லாதபோதும் பணிவாக இருப்பவர், கேள்வி கேட்பவர்களை மதிப்பவர், செய்தியாளர் சந்திப்பில் மக்களின் பிரச்சினையைத் தன் பிரச்சினையாகப் பேசுபவரே தலைவன்! அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பவர் அல்லவா தலைவன்! ' அரசாங்கம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், உலகத் தொழிற்சாலைகளையும் உருவாக்கும்போது... நம் பிள்ளைகள் தியேட்டர் வாசலில்...??!! ஒரு நடிகனின் படத் தோல்விக்காகச் சமூக வலைதளத்தில் மல்லுக்கட்டுகிறார்கள்... என் அறிவுள்ள சமூகதிற்கு என்ன ஆயிற்று..?? செல்வப் பகிர்வில் இருக்கும் சமமின்மை, பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பருவநிலை மாற்றம், ஜாதிப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என நம் முன்னே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மலைபோல் கிடக்கின்றன... இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, ஒரு நடிகனுக்காகச் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும், நம் கல்லறையை நாமே தோண்டிக் கொள்வதற்குச் சமம். அவர் கோடிகளில் புரள, கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர் கூட்டம்... அவன் பிள்ளைகள் லண்டனில் படித்து அதிகாரத்திற்கு வருகிறார்கள்.. இவர்கள் பதாகைகள் ஏந்தி கொண்டு ரோட்டில் நிற்கிறார்கள்.... எந்த நடிகரின் படம் வெளி வராவிட்டாலும் யார் வீட்டு அடுப்பும் எரியாமல் இருக்கப் போவதில்லை.. உலை கொதிக்காமல் இருக்க போவதில்லை.. தன் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக முதுகொடிய வேலை பார்க்கும் தகப்பனை விடவா ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு தலைவன் உண்டு..??!! அந்த தகப்பனுக்கு தலைவா என்று கூறி ஒரு கிளாஸ் தண்ணீர் என்றைக்காவது இந்த பிள்ளைகள் கொடுத்திருக்கிறார்களா..??" நுரையீரல் உறைய இமயமலையின் கார்கில்லே நம்மை காக்க உட்கார்ந்திருக்கும் ராணுவ வீரனை விடவா... அவர்களின் ரத்தத்தை பார்த்து வராத கோபம்.... ஒரு படம் வெளி வராததுக்கு ஏன் வருகிறது என்று புரியவில்லை... எப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தில் நம் இளைஞர் கூட்டம் உழன்று கொண்டிருக்கிறது? ​எந்த ஒரு ஹீரோவும் இந்தப் பிள்ளைகளை தன் தம்பியாகவோ, மகனாகவோ பார்ப்பதில்லை. அவர்களின் பார்வையில் இவர்கள் - 'பூஜ்யம் பட்ஜெட் முதலீடாக' (Zero Budget Investment)!.மட்டுமே!! ​கூட்டம் சேர்க்க காசு தேவையில்லை: ரசிகன் என்ற அடிமை இருக்கிறான். ​கொடி பிடிக்க ஆள் பிடிக்க வேண்டியதில்லை: சினிமா மோகத்தில் திளைக்கும் தொண்டன் இருக்கிறான். ​கோஷம் போடக் கூலி கொடுக்க வேண்டியதில்லை: கட்-அவுட்டுக்குத் தன் காசில் பால் ஊற்றும் பைத்தியக்காரன் இருக்கிறான். ​ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். ஆனால், இந்த நடிகர்கள் மிகச் சாதாரணமாக இவர்களை முதலீடு செய்கிறார்கள். இவர்களின் உழைப்பு, நேரம், உணர்ச்சி - அத்தனையையும் அவர்கள் இலவசமாகப் பிடுங்கிக் கொள்கிறார்கள். ​அவர்கள் தொண்டனாகப் பார்க்கவில்லை, வெறும் 'தலை எண்ணும் கூட்டமாக' மட்டுமே பார்க்கிறார்கள். ​நடிகர்கள் தங்கள் வாரிசுகளைப் பதவியில் அமர்த்த, நம் பிள்ளைகள் தன் வாழ்க்கையைத் தெருவில் அடகு வைக்கிறார்கள். திரையில் அவர்கள் பேசும் வசனங்களுக்கு கைதட்டிக் கொண்டாடும் கூட்டமே...; நிஜத்தில் உன் வீட்டுத் தட்டில் சோறு போடுவது அந்த நடிகன் அல்ல, உழைக்கும் உன் கைகள்தான்! ​இனியும் ஒரு நடிகனின் 'முதலீடாக' இருக்கப் போகிறாயா? அல்லது உன் சொந்த வாழ்வின் 'முதலாளியாக' மாறப்போகிறாயா... சிந்தியுங்கள்..?நம் நலம் விரும்பும் தலைவரை தேடுவோம்..💥 இது ஒரு தனிநபருக்கு எதிரான கருத்து அல்ல, என் இனத்தின் தகுதியை உயர்த்தும் ஆதங்கம்"

கருத்துகள்