படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*என்மனம் கவர்ந்த அம்பேத்கர்* (பா வகை_*வழிநடைச்சிந்து*) அக்கிரமம் அத்தனையும் அழித்திடவே__*அம்பேத்கர்* அவனியில் பிறந்தாரே! அறிவால் உயர்ந்தாரே! எக்காளம் போட்ட ஏற்றத்தாழ்வை__*அம்பேத்கர்* இல்லாமல் செய்தாரே! இருட்டெல்லாம் ஒழித்தாரே! (1) தீண்டாமை என்ற திரைதனை__*அம்பேத்கர்* தீய்த்திட முனைந்தாரே! தீர்மானம் செய்தாரே! ஆண்டாண்டுக் கால அநியாயம்__*அம்பேத்கர்* அத்தனையும் எரித்தாரே! அருளொளியாய்த் திகழ்ந்தாரே! (2) எல்லோரும் ஓரினம் என்றேதான்__*அம்பேத்கர்* எவ்விடமும் முழங்கினாரே! ஏறு போல் ஓங்கினாரே! கல்வியொன்றே முன்னேற்றும் கருவியென__*அம்பேத்கர்* கற்கச் சொன்னாரே! கற்றூணாய்த் தாங்கினாரே! (3) சாதிமதப் பேதத்தைச் சாய்த்திடவே__*அம்பேத்கர்* சமத்துவம் மலர்த்தினாரே! சட்டங்கள் படைத்தாரே! கோதிலாத அன்பேதான் கோவிலென்றே__*அம்பேத்கர்* அழகாய்ச் சொன்னாரே! அறிவால் ஒளிர்ந்தாரே! (4) த.ஹேமாவதி கோளூர்

கருத்துகள்