வானின் எல்லை
சிறகிற்கு மட்டுமே..
அமாவாசையோ
பெளர்ணமியோ..
குட்டி நட்சத்திரமோ..
விழிகளுக்குள்
காணுதல் இல்லை..
வானத்தின் மறுப்பக்கம்
என்னாவாக இருக்கும்மென்பதே
அதன் கனவு.....
அக்கம்பக்கம் உறவோ
நட்போ....
ஒரு கவளம் இரைதருமென
ஏங்குவது இல்லை..
நோவுகொண்ட மனமானாலும்
உடலானாலும்..
சிறகுக்குள்ளாவே
மருந்து தேடும்..
கூடைத்
தூக்கியே இருப்பதில்லை..
நிரந்தரமற்ற கூடென தெரிந்ததால்..
அதன் விழிக்குள் சிறு வைரம்
ஒளிர்ந்து அசைகிறது..
எட்டாக்கனியா வானம்?
போடுகிறேன்
வானம் நோக்கிய
என் ஏணியை..
ஸ்ரீவாரிமஞ்சு

கருத்துகள்
கருத்துரையிடுக