படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழச்சி கயல்விழி 25 பைசா இல்லாத வாழ்க்கை, இன்றைக்கு கோடி கணக்கில் சொத்து: ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தை தொடங்கிய மெய்யப்பன் எழுதிய கடிதம்! தமிழ் சினிமா என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஏ.வி.எம். ஸ்டூடியோ தான். இதற்கு முழு விளக்கம் ஏ.வி.மெய்யப்பன் என்பது தான். ஏ.வி.எம். சரவணனின் அப்பா தான் இந்த மெய்யப்பன். பிளாக் அண்ட் வெயிட் காலக்கட்டத்தில் இருந்து தற்போதுவரை முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஏ.வி.எம். நிறுவனம். தற்போது பட தயாரிப்பு பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்புகள் உட்பட பல பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏ.வி.எம்.சரவணன் இறந்தவுடன் ஏ.வி.எம். ஸ்டூடியோ குறித்த தகவல்கள் அதிகமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு ஒரு தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமா என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஏ.வி.எம். ஸ்டூடியோ தான். இதற்கு முழு விளக்கம் ஏ.வி.மெய்யப்பன் என்பது தான். ஏ.வி.எம். சரவணனின் அப்பா தான் இந்த மெய்யப்பன். காரைக்குடியை சேர்ந்த இவர், முதலில் நண்பர்களுடன் இணைந்து பிரகதி ஸடூடியோ என்ற பெயரில் படங்களை தயாரித்து வந்துள்ளார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனியாக ஸ்டுடியோ தொடங்கிய இவர், அதற்கு தனது பெயரான ஏ.வி.எம். என்று வைத்துள்ளார். 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏ.வி.எம். ஸ்டூடியோ தயாரித்த முதல் படம் 1947-ம் ஆண்டு வெளியான நாம் இருவர். இந்த படத்தை தயாரித்தது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் இயக்குனராகவும் ஏ.வி.மெய்யப்பன் இருந்துள்ளார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை தயாரித்த இந்நிறுவனம், கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு இதுவும் கடந்து போகும் என்ற படத்தை தயாரித்திருந்தது. அதன்பிறகு கடந்த 11 வருடங்களாக பட தயாரிப்பு பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் ஏ.வி.எம். ஸ்டூடியோ மற்றும் கார்டனில் பல படங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த டிசம்பர் 3-ந் தேதி பிறந்த நாள் கொண்டாடிய ஏ.வி.எம். சரவணன், டிசம்பர் 4-ந் தேதி மரணமடைந்தார். அவரது மரணம், தமிழ் சினிமாவில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏ.வி.எம். சரவணன் குறித்து பலரும் தங்கள் நினைவுகளை கூறி வரும் நிலையில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு ஏ.வி.எம். சரவணனின் அப்பா ஏ.வி.மெய்யப்பன் குறித்து ஒரு தகவலை கூறியுள்ளார். ஒருமுறை, ஏ.வி.எம் சரவணனை சந்திக்க அவரது வீ்ட்டுக்கு போனேன். அப்போது அவரது வீட்டில் பல புகைப்படங்கள், இருந்தது. அதில் ஒரு போஸ்ட் கார் இருந்தது. அதில், பெங்களுருக்கு படப்பிடிப்பிடிப்புக்கு வந்தேன். மழை பெய்து செட் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டது. எடுத்து வந்த 2 வேட்டியும் அடித்துக்கொண்டு போய்விட்டது. கையில் நாலு அனா (25 பைசா) கூட இல்லை. பைனான்சியரிடம் சென்று பணம் கேட்டால் என்ன சொல்வான் என்று தெரியாது. கையில் இருப்பதை வைத்து பிள்ளைகளை பார்த்துக்கொள் இப்படிக்கு மேனா (மெய்யப்பன்) என்று எழுதி இருந்தது. இந்த கடிதத்தின் மூலம் தான் நடுத்தெருவில் இருக்கிறேன் என்பதை தனது குடும்பத்திற்கு உணர்த்திய ஏ.வி.மெய்யப்பன் தான் இன்று இப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதை அப்போது நான் தெரிநதுகொண்டேன் என இளவரசு கூறியுள்ளார்.

கருத்துகள்