படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

Sakthidevi wts app பதிவில் இருந்து 1965. இத்தாலியில் ஒரு குக்கிராமம். பருவ வயதில் வரும் காதல் 17 வயது பிராங்காவுக்கும் மலர்ந்தது. மெலோடியா என்னும் பையனை உயிருக்குயிராய் காதலித்தாள். சில மாதங்களிலேயே அவன் துப்பாக்கி தூக்கி திரியும் கொள்ளைக்கார கும்பலை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. உடனே காதலை முறித்தாள். அவனோ பத்து பேருடன் வந்து அம்மாவை அடித்து போட்டு விட்டு அவளையும், எதிர்த்த அவன் தம்பியையும் ஒரு காட்டுக்குள் கடத்தி போனான். இரு தினங்களில் தம்பியை விரட்டி விட்டான். எட்டு நாட்கள் அவன் மட்டுமே பிராங்காவை மாறி மாறி கற்பழித்தான். பிறகு வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். அப்போது இத்தாலியில் இருந்த சட்டப்படி ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டால், அந்த பெண், அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை, கிராம பஞ்சாயத்துக்கு போன போது சொம்பு வைத்து இருந்த தலைவர், இருவரும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என "தீர்ப்பு" அளித்தார். 17 வயது பிராங்கா, பஞ்சாயத்து தீர்ப்பை தூக்கி எறிந்தாள். ஊர் முடிவுக்கு கட்டுப்படாமல் எதிர்த்து நின்றாள். அவளையும் குடும்பத்தையும் ஊர் எல்லையை விட்டு தள்ளி வைத்தார்கள். போடா வெண்ணெய் என்று சொன்ன பிராங்கா தனி ஒருத்தியாக போராடினாள். கோர்ட்டுக்கு போனாள். சட்டம் அவளுக்கு எதிராய் நின்றது. ஆனால், நீதிபதி வழக்கை ஏற்றார். பதிவு செய்தார். இது என்ன நியாயம் என்று நாட்டு மன்னருக்கு கடிதம் எழுதினார். அரசர் வேறு வழி இல்லாமல் இந்த வழக்குக்கு விதி விலக்கு அளித்தார். வழக்கு தீவிரமாக நடந்து அந்த பையனுக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஊரை விட்டு தள்ளி வைக்கும் தீர்ப்பும் குப்பையில் ஏறியப்பட்டது. முதலில் அந்த கிராம பெண்கள் பிறகு அக்கம்பக்க ஊர், பின் இத்தாலி நாட்டு பெண்கள் அனைவரும் பிராங்கா பின்னால் அணி வகுத்து வெகுண்டு எழுந்தனர். உலகமே எழுச்சி பெற்றது. இன்னொரு புறம் துப்பாக்கி தூக்கும் கொலைகார பழமைவாத ஆண்கள் பிராங்காவிற்கு எதிராக அணி திரண்டனர். அவளை கொலை செய்ய முயன்று கொண்டே இருந்தனர். ஊடகங்களை சந்திக்க மறுத்து தன் தனிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் பிராங்கா. ஆனால், ஊரும் நாடும் அவளை விட வில்லை. கொண்டாடி தீர்த்தனர். இத்தாலிய அதிபர் சரகட் அவள் வீட்டுக்கே போய் மரியாதை செய்தார். போப் ஆண்டவர் VI அவளை வாடிகனுக்கே வரவழைத்து சந்தித்து பேசினார். இதனால், பிராங்காவிற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. கற்பழிப்பு நடந்து, 15 ஆண்டுகள் கழித்து, சட்டம் திருத்தப்பட்டது. கற்பழிப்பு குற்றங்களுக்கு கடும் தண்டனை தர வழி செய்யப்பட்டது. 17 வயது சிறுமியாக, நாட்டையே எதிர்த்து, மன்னரை எதிர்த்து, கொடூர ஆண் கொலைகாரர்களை எதிர்த்து தன்னந்தனியே போராடிய பிராங்காவின் மன தைரியத்தால் அந்த நாட்டு பெண்களுக்கே விடிவு காலம் பிறந்தது. ஒவ்வொரு நாடும் படிப்படியாக கற்பழிப்பை குற்றமாக்கி சட்டம் இயற்றின...இந்தியா உள்பட!!!! தன் உடன் படித்த, தன்னை உயிருக்கு உயிராக நேசித்த, தன்னை அப்படியே ஏற்றுக் கொண்ட ரவூசி என்கிற வாலிபனை திருமணம் செய்து பேரன் பேத்திகள் என அமைதியாக வாழ்ந்து முடிந்தார் பிராங்கா!!!

கருத்துகள்