வணக்கம் ." சீனத்தின் போர் இலக்கியமாகக் கருதப்படுகிற 'போர்க்கலை' சில நுட்பங்களைக் குறிப்பிடுகிறது. அவை வர்த்தகத்திற்கும் பொருந்தும் .போர் நடக்கும் இடத்தை யார் முதலில் அடைகிறார்களோ, எதிரிக்காக காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம். இன்றும் முதன்முதலாக ஒரு பொருளை அறிமுகப்படுத்துபவர்களின் கை வர்த்தகத்தில் ஓங்கியிருப்பதைப் பார்க்கலாம். சன்சு ஒன்பது விதமான போர் நிலப் பகுதிகளை சுட்டிக்காட்டுகிறார். முக்கிய மைதானத்தை ஆக்கிரமிக்கும் எதிரியைத் தாக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
குவிகிற நிலப்பகுதியில் அண்டை நாடுகளோடு இணக்கமாகப் போகுமாறு அறிவுறுத்துகிறார். நான்கு புறமும் சூழப்பட்ட போது தந்திரங்களைக் கையாளவும் வேறு வழியில்லாத நிலப்பகுதியில் துணிச்சலாகப் போரிடவும் அறிவுறுத்துகிறார். திருவள்ளுவரும் இடனறிதல் என்று ஓர் அதிகாரத்தை ஒதுக்கி யிருக்கிறார் நீரில் முதலை மற்ற உயிர்களை எளிதாக வெல்லும். அதற்குப் பலமாக இருப்பது நீர்தான் என்று வாய்ப்பைப் பற்றி அறிவுறுத்துகிறார். அஞ்சாத யானையும் சேற்றில் விழுந்தால் நரிகளால் கொல்லப்பட்டு விடும் என்று அவர் எச்சரிக்கிறார். எனவே எந்தச் சூழலில் வாய்ப்பு வருகிறது என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாய்ப்புகளை உருவாக்கவும், தேவைப்பட்டால் நமக்குச் சார்பாகத் திருப்பவும் தெரிந்தால் தான் வர்த்தகம் சிறப்பாக நடக்கும்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 337.இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக